ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை சமத்துவமின்மையை குறைப்பதாக இருக்க வேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை சமத்துவமின்மையை குறைப்பதாக இருக்க வேண்டும்!

புதுதில்லி, ஜன. 30- “இந்திய அரசின் 2022--2023 நிதி யாண்டிற்கான நிதிநிலை அறிக்கையானது, நாட் டில் நிலவும் பொருளா தார சமத்துவமின்மையை குறைப்பதற்கு முக்கியத்து வம் அளிக்க  வேண்டும்என்று ரிசர்வ் வங்கி யின் மேனாள் ஆளுநர் டி.சுப் பாராவ் கூறியுள்ளார். இந்திய அரசின் 2022-2023  நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை, பிப்ர வரி 1 அன்று நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப் படவுள்ளது. இதையொட்டிரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர் டி.சுப்பாராவ் கூறியிருப்பதாவது:

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்பதே ஒவ் வொரு நிதிநிலை அறிக் கையின் நோக்கம். அதே சமயம், இந்த முறை தாக் கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் பொருளாதார சமத்துவ மின்மையைக் களையும் வகையில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

உலகின் மிகவும் சமத் துவ மற்ற நாடுகளில் ஒன் றாக இந்தியா உள்ளதுஎன, சமீபத்தியஉலக சமத் துவ மின்மைஅறிக்கை தெரிவித்துள்ளது. இத்த கைய பரந்துபட்ட சமத் துவமின்மை, தார்மீக ரீதி யாக தவறானது. அரசியல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த நிலை, நமது நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை யும் சிதைக்கும்.

எனவே, புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கு வதே, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் கருப் பொருளாக இருக்க வேண் டும். இருக்கும். தீவிர வேலைவாய்ப்பு நமக்கு தேவைப்படுகிறது.   இவ் வாறு டி. சுப்பாராவ் கூறி யுள்ளார்.

No comments:

Post a Comment