டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
உயர்ஜாதி அரியவகை ஏழைகளுக்கான 10சதவீத இட ஒதுக்கீடு குறித்த வழக்கை இன்றே நடத்திட உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு முறையீடு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
விவசாயிகள் பிரச்சினையில் பிரதமர் மோடியின் அகங்கார பேச்சு குறித்த மேகாலாயா ஆளுநர் சத்யபால் மாலிக் கருத்தின் அடிப்படையில் மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் கோரிக்கை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
அன்னை தெரசா துவக்கிய மிஷினரிஸ் ஆப் சேரிட்டி எனும் அரசு சாரா அமைப்புக்கு வெளி நாடுகளில் இருந்து நிதி உதவியை ரத்து செய்யும் ஒன்றிய அரசின் ஆணை, ஏழைகளுக்கான உதவியை தடுக்கும். இந்த பணியை ஹிந்துத்துவா அமைப்பு நடத்துமா என மும்பை நகர மேனாள் காவல் ஆணையர் ஜுலியோ ரிபிரோ கேள்வி.
தி டெலிகிராப்:
700 விவசாயிகள் தனக்காக இறக்கவில்லை என மோடி ஆணவமாக பேசினார் என வேளாண் சட்டங்கள் குறித்து மேகாலாயா ஆளுநர் சத்யபால் மாலிக், பிரதமர் மோடியை சந்தித்து உரையாடிய போது பேசியதாக குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
வலதுசாரி அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் தனது யுக்தியை மாற்றி அமைக்க வேண்டும் என தலையங் கத்தில் கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது என சி.எம்.அய்.இ. அமைப்பு அறிக்கை..
- குடந்தை கருணா
No comments:
Post a Comment