பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டிய பெண்மீது துப்பாக்கிச்சூடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டிய பெண்மீது துப்பாக்கிச்சூடு

லக்னோ, ஜன.7-  உத்தரப்பிரதேசத் தில் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டிய காங்கிரஸ் தலைவர் அடையாளம் தெரியாத மூன்று நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட் டுள்ளார்.

சமாஜ்வாடி கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்த ரீட்டா என்பவர்  .பி.மாநிலம் சுல்தான் பூரில் நவம்பர் 16 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டினார். இதற்காக ஒருவாரம் சிறையில் இருந்தவர் பிணையில் விடுதலையானார்.

இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேர்

கடந்த 5.1.2022 அன்று லக்னோ - வாரணாசி நெடுஞ்சாலையில் ரீட்டா காரில் சென்றுகொண்டிருந்த போது, இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேர், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில், ரீட்டாவும், கார் ஓட்டுநர் முஸ்தகீம் (50) என்பவரும் படுகாயம் அடைந்துள்ளனர். 

துப்பாக்கிச்சூடு தொடர்பாக லம்ஹூவா காவல்துறையினார், அடையாளம் தெரியாத 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். எனினும், இதுவரை எவரும் கைது செய்யப் படவில்லை.

தங்களுக்கு எதிரான கருத்தா ளர்களை இருசக்கர வண்டியில் தொடர்ந்து கண்காணித்து, துப்பாக் கியால் சுட்டுக்கொல்லும் கொலை வெறிச்செயலில் இந்துத்துவ வன் முறையாளர்கள் ஈடுபட்டு வந்துள் ளனர். அதேபோல் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டிய ரீட்டாமீதும் துப்பாக்கிச்சூடுமூலம் கொலைவெறித்தாக்குதல் நிகழ்வு அரங்கேற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment