தனி ஒருவராக தென் துருவத்தை அடைந்த முதல் பெண் இந்திய வம்சாவளி பெண் சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

தனி ஒருவராக தென் துருவத்தை அடைந்த முதல் பெண் இந்திய வம்சாவளி பெண் சாதனை

அண்டார்டிகா, ஜன. 5- இங்கி லாந்தில் பிறந்த இந்திய வம்சாவளியான ப்ரீத் சண்டி, தனி ஒருவராக தென்துருவத்தினை சென்றடைந்த முதல் பெண் என்ற பெருமையை  பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு நவம் பர் மாதம் தன் பயணத்தை தொடங்கிய ப்ரீத் சண்டி, அண்டார்டிகா முழுவ தும் பனிச்சறுக்கு செய்த படியே  40 நாட்களில் 1,126 கி.மீ கடந்து சாதனை பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

அண்டார்டிகா பூமியின் மிகவும் குளிர்ந்த கண்டம். யாரும் அங்கு நிரந்தரமாக வாழ முடி யாது. அண்டார்டிகா பயணத்திற்கு திட்டமிட் டபோது அங்குள்ள நிலைமை எனக்கு அவ்வ ளவாக தெரியாது. பிறகு இரண்டரை வருடங்கள் பிரெஞ்ச் ஆல்ப் மலையி லும், அய்ஸ்லாந்தில் உள்ள மலைகளிலும் பயிற்சி எடுத்தேன். அண்டார் டிகா பயணத்தின்போது உணவு, உடை, மருத்துவ சாதனங்கள் என 90 கிலோ எடையை முதுகில் சுமந்து சென்றேன்.

இந்த பயணத்தை முடித்தபோது பெரும் நம்பிக்கை எனக்குள் தோன்றியிருக்கிறது. ஒரு வர் தன் மீது முழு நம் பிக்கை வைத்து எல்லை களை கடந்து முயற்சி செய்தால் பெரிதாக சாதிக் கலாம் என்ற உத்வே கத்தை அளிக்க விரும்புகி றேன்.

இவ்வாறு ப்ரீத் சண்டி கூறினார்.

ப்ரீத் சண்டி பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இதையடுத்து அவருக்கு பிரிட்டன் ராணுவத்தின் தலைமை அதிகாரி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment