தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்க முடிவு - புதிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்க முடிவு - புதிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு

தருமபுரி, ஜன. 10- தருமபுரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் தருமபுரி பெரியார் மன்றத்தில் டிசம்பர் 23.12.2021 அன்று நடைபெற்றது.

மாநில திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் .மு. யாழ்திலீபன் வரவேற்றுப் பேசி னார். மாவட்ட இளைஞரணி தலைவர் அர.ஆனந்தன் கடவுள் மறுப்புக் கூற மாவட்ட கழக தலைவர் மு.பரமசிவம், மண்டல கழகத் தலைவர் .தமிழ்ச் செல்வன், மாநில மகளிர் அணி செயலா ளர் தகடூர் தமிழ் செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட மாவட்ட கழகத் தலை வர் மு.பரமசிவம், மாவட்ட செயலா ளர்கள் .மு.யாழ்திலீபன் ஆகியோரை அறிமுகப்படுத்தி பயனாடை அணிவித் தனர்.

தந்தை பெரியார் நினைவு நாள் குறித்து திராவிடர் கழக அமைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன் தொடக்க உரையாற்றினார். மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலை வர் அண்ணா. சரவணன் மாநில கலைத் துறை செயலாளர் மாரி. கருணாநிதி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் .மாணிக்கம்,மாவட்ட துணைத் தலை வர் வண்டி. ஆறுமுகம், உள்ளிட்டோர் புதிய பொறுப்பாளர்களுக்கு பயனாடை அணிவித்து பாராட்டி வாழ்த்தி பேசி னர். கழக அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன் புதிய பொறுப்பா ளர்களுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான பகுத்தறிவாளர் நாட்குறிப்பை வழங்கி வாழ்த்திப் பேசினர்.

கழக அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரனிடம் தருமபுரி மாவட்ட கழக தலைவர் மு.பரமசிவம், பகுத்தறிவு ஆசிரியர் இர.கிருஷ்ண மூர்த்தி, வழக்குரைஞர் தமிழ் பிரபாக ரன், மாவட்ட துணைச் செயலாளர் கு.சரவணன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சி. காமராஜ், கிருஷ்ண கிரி மாவட்ட சார்பில் மாவட்ட செயலாளர் .மாணிக்கம், மேனாள் மாவட்ட தலைவர் கோ.திராவிட மணி, மாவட்ட துணைத் தலைவர் வண்டி ஆறுமுகம்,நகர தலைவர் தங்கராசு, மத்தூர் ஒன்றிய தலைவர் கி. முருகேசன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர் .வெங்கடேசன், ஆகியோர் இணைந்து விடுதலை சந்தாக்களை வழங்கினர். அதேபோல கிருஷ்ணகிரியில் கட்டப்பட்டு வரும் பெரியார் மன்றத்திற்கு ஆசிரியர் இர.கிருஷ்ணமூர்த்தி, வழக்குரைஞர் பீம. தமிழ் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் கு.சரவணன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சி.காம ராஜ், ஆகியோர் தலா 14 மூட்டை சிமெண்ட் அளிப்பதாக உறுதியளித் தனர்.

தீர்மானங்கள்

மாவட்ட கலந்துரையாடல் கூட் டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.

தருமபுரி மாவட்ட கழகத் தலைவர் மு. பரமசிவம், மாவட்ட செயலாளர் .மு.யாழ்திலீபன், ஆகியோரை தமிழர் தலைவர் பகுத்தறிவு போராளி ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு இக்கூட்டம் உளமார்ந்த நன்றியை மாவட்ட கழகத் தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறது. மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றிய வீ. சிவாஜிக்கு இக்கூட்டம் பாராட்டை யும் நன்றியையும் தெரிவித்துக் கொள் கிறது.

தந்தை பெரியாரின் விருப்பப்படி ஒன்றிய அரசு பெண்களின் திருமண வயது 21 என்பதை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த சட்டத் திருத்தம் கொண்டு வந்ததையும் அந்த சட்டத்தை ஆதரித்து தமிழர் தலைவர் விடுதலையில் பாராட்டி வரவேற்றதையும் தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் பாராட்டி வரவேற்கிறது.

பங்கேற்றோர்

பொதுக்குழு உறுப்பினர் .கதீர், நகர தலைவர் கரு. பாலன், கிருஷ்ணகிரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் பொறுப் பாளர் வெங்கடேசன், ஒன்றிய தலைவர் .துரைசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் அர.ஆனந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.சிறீதரன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் .பிரதாப், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அர்ஜுனன், மாரவாடி தலைவர் ஊமை. காந்தி, கா. காரல் மார்க்ஸ், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சி.காமராஜ், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் பூபதி ராஜா, மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய செய லாளர் மா.சென்ராயன், சாமிநாதன் உள்ளிட்ட தோழர்கள் பங்குபெற்றனர். விடுதலை நாளிதழ் சந்தா சேகரித்து வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment