கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு தமிழ்நாடெங்கும் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு தமிழ்நாடெங்கும் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை,  ஜன. 10- கோவை வெள்ளலூர் பெரியார் சிலைக்கு காவி சாயம், செருப்பு மாலை போட்ட கயவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.-

கோவை

கோவை வெள்ளலூர் பெரியார் சிலைக்கு காவி சாயம், செருப்பு மாலை போட்ட கயவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் உள்ள தந்தை பெரியார் பகுத் தறிவு படிப்பகத்தில் தந்தை பெரியார் முழு உருவ சிலைக்கு 9 தேதி அதிகாலை காவிப் பொடி தூவி செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்யப் பட்டு இருந்ததைக் கண்டித்தும், கயவர் கள்மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோவை மாவட்ட திராவிடர் கழகம் தோழர்கள் திரண்டு வெள்ளலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலை வர் .சந்திரசேகர், மாவட்ட செயலா ளர் திக செந்தில்நாதன், மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்செல்வன், மாவட்ட துணை செயலாளர் திக காளிமுத்து, மண்டல இளைஞரணி செயலாளர் .பிரபாகரன், மண்டல செயலாளர் .சிற்றரசு, மாநகர செயலா ளர் புலியகுளம் .வீரமணி, வெள்ளலூர் நகர திக ஆறுச்சாமி, சுந்தர்ராஜன், பொன்ராஜ், சுரேந்தர், பெரியார் மணி, திருநாவுக்கரசு, ஜெயந்த் ,இலைகடை செல்வம், ரவிக்குமார் மற்றும் திமுகவை சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன், கார்த்திக்கேயன், ஜெகதீசன், ராஜ் () ராஜேந்திரன், சுகுமார், எம் ஜி ராமச் சந்திரன், காராத்தேமதன், பிரேம்குமார், மற்றும் பாவாணர் படிப்பகம் சிவராம் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட் டத்தில் கலந்துகொண்டு பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்தவர்களை கண்டு பிடித்து காவல்துறை உடனடி யாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரத்தநாடு

கோவை வெள்ளலூர் தந்தை பெரியார் சிலையை அவமதித்த காலி களை கண்டித்து தஞ்சை மாவட்டம் உரத்தநாட்டில் காலை 10 மணிக்கு அண்ணா சிலை அருகில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

10.01.2022 அன்று காலை 10 மணிக்கு உரத்தநாடு அண்ணா சிலை அருகில் மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா. குணசேகரன் தலைமையில் உரத்தநாடு ஒன்றிய அமைப்பாளர் மாநல். பரமசிவம், திருவோணம் ஒன் றிய செயலாளர் அரசு இளங்கோ, நகர தலைவர் பேபி ரவிச்சந்திரன், நகர செயலாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் முன்னிலையில் மாநில கலைத் துறை செயலாளர் .சித்தார்த்தன் மாவட்ட செயலாளர் . அருணகிரி, மாநில பெரியார் வீர விளையாட்டுக் கழக செயலாளர் நா. இராமகிருஷ்ணன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன், ஒன்றியத் துணை செயலாளர் நா. பிரபு, நகர இளைஞரணி தலைவர் பேபி. ரமேஷ், நகர இளைஞரணி செயலாளர்

பு.செந்தில், ஒன்றிய விவசாய அணி செய லாளர் . அறிவரசு, ஒக்கநாடு மேலையூர் பெரியார் நகர் . உத்திராபதி, மண் டலகோட்டை செந்தில், ஒக்கநாடு மேலையூர் பொறியாளர் பாலு, ஒக்க நாடு மேலையூர் சாமி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

கோபி, ஈரோடு

கோவை வெள்ளலூர் தந்தை பெரியார் சிலையை அவமதித்த காலி களை கண்டித்து  கோபி பேருந்து நிலையத்திலும், ஈரோட்டிலும்  கழக பொறுப்பாளர்கள் தலைமையில் கழக தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment