இந்தி...ஆ.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 29, 2022

இந்தி...ஆ....

இருள் சூழ்ந்த வடக்கு

சமம் தேய்ந்து கிடக்கு

திராவிடத்தால் தெளிந்த தெற்கு

திடமாய் உயர்ந்திருக்கு...

 

கோட்டுக்கும்

பாதுகாப்புக்கும்

பல கோடியாம்- ஏழை

இந்திய நாட்டுக்கு

இவர் தான் பிரதமராம்...

 

கார்ப்பரேட்டுக்கு

கை குலுக்கி

இந்தியாவை    

விற்றுவிட்டார்!

கேடுகெட்ட

சங்கிகளென்று-

உலகமே

காறி உமிழுதே

தாமரையும் நாறுதே...

 

தண்ணீரில்லாக் குளத்திலே

டைவ்' அடிக்கும் சங்கிகளே

விடுதலை போராட்ட

வீரர்களின்றி

குடியரசு விழாவா!

நூல் இல்லாமல்

பட்டமா! இதென்ன

பூணூல் கயிற்றின்

திட்டமா..

 

சங்கிகளின்

முகத்திரை

நார்நாராய்

கிழிந்ததே!

கொடுங்கோல் ஆட்சியென்று

உலகம்

சாட்சி சொல்லுதே!

 

சங்கிக் கூட்டம்

ஒழியும் ஆட்டம்

விரைவிலே வரும்!

பெரியார் போட்ட

பகுத்தறிவுப் பாதை

சமத்துவம்

தேடித்தரும்......

- இந்திரதாசன்

No comments:

Post a Comment