பகுத்தறிவாளர் கழகம்-அழிபடை தாங்கி சே.மணிவண்ணன் மணவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

பகுத்தறிவாளர் கழகம்-அழிபடை தாங்கி சே.மணிவண்ணன் மணவிழா

வெம்பாக்கம், ஜன. 25- திருவண் ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிபடை தாங்கி பா.சேகர்- -பதிபூரணம் ஆகியோரின் மகன், சென்னை தலை மைச் செயலக அலுவலர் சே.மணிவண்ணன், கரந்தை இரா.முருகேசன்-அன்னம்மாள் ஆகியோ ரின் மகள் செவிலியர் மு.அனுசுயா ஆகியோருக்கு வாழ்க்கைத் துணை இல் லற ஏற்பு விழா, அரனா மாள்பேட்டை அண்ணா மலையார் திருமண மண் டபத்தில் 23.1.2022 பிற் பகல் ஒரு மணியளவில் நடைபெற்றது.

முன்னதாக மணமகன் சே.மணிவண்ணன் எழு தியஒரு புல்லாங்குழலின் புறநீர்மை" கவிதை நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. தந்தை பெரியாரின் சுயமரியாதை திருமண முறையில் திரு வண்ணாமலை மாவட்ட தி.மு.. ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவா சன் தலைமையில், மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் இரா.கரு ணாகரன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் சு.மாரிமுத்து வரவேற்புரை ஆற்றினார். தலைமைச் செய லக சார்பு செயலாளர்கள் மா.சதீசுகுமார், .காந்தி மதி, அலுவலர்கள் பு.ரா. காதர்மொகிதீன், மு.செந் தில், .பவானி, விஜயகுமார், பிரேம்சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வடமணபாக்கம் வி.வெங்கட்ராமன், பொன் னம்பலம்-நவநீதம், கரந்தை இரா.முத்துரோகினி, இரா. சந்திரன்-சின்னபாப்பா, இரா.கிருஷ்ணன்-இந்திரா, இரா.வடிவேல் குட்டியம் மாள், மு.சந்திரன், மு.நாராயணன், பிரகாசம், சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சே.மேகவண்ணன் நன்றி கூறினார். மேடையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அண்ணல் பி.ஆர்.அம்பேத் கர் ஆகியோரின் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட் டிருந்தன.

No comments:

Post a Comment