50 லட்சம் பயன்படுத்தப்படாத கோவிஷீல்ட் டோஸ்கள் காலாவதியாகிறதா? ஒன்றிய அரசு விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 5, 2022

50 லட்சம் பயன்படுத்தப்படாத கோவிஷீல்ட் டோஸ்கள் காலாவதியாகிறதா? ஒன்றிய அரசு விளக்கம்

புதுடில்லி,பிப்.5- பிப்ரவரி மாதத்திற்குள்  பயன்படுத்தப்பட வேண்டிய 50 லட்சம் கோவிஷீல்ட் டோஸ்கள் குறித்து ஒன்றிய அரசு  தெரிவித்துள்ளதாவது,

ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்த மட்டில் மானிய விலையிலோ அல்லது பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) திட்டத்தின் கீழோ தடுப்பூசி வழங்குதல் போன்ற  நடவடிக்கைகளை முயற்சி செய்யலாம் என் றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட மாநிலங்களின் கோரிக் கையின் பேரில், தடுப்பூசி காலாவதியாகாமல் இருக்கவும், வீணாதலை தவிர்க்கவும் தனியார் துறை சுகாதார வசதிகளிலிருந்து மாநில அரசு சுகாதார வசதிகளுக்கு விதிவிலக்கு அடிப் படையில் தடுப்பூசிகளை மாற்றும் ஏற்பாட்டிற்கு ஆட்சேபனை இல்லை என்றும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியது. இது குறித்த தகவல்கள் கோவின் டிஜிட்டல் தளத்தில் கிடைக்கின்றன.

இது தவிர, மேற்கு வங்காளம், மகாராட்டிரா, கருநாடகா, தெலங்கானா , குஜராத் மற்றும் டில்லி போன்ற மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, தனியார் கோவிட் தடுப்பூசி மய்யங்களில் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment