கோயிலில் பார்ப்பனர்களின் பாதத்தை கழுவி பாத பூஜையா? கேரள அமைச்சர் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 9, 2022

கோயிலில் பார்ப்பனர்களின் பாதத்தை கழுவி பாத பூஜையா? கேரள அமைச்சர் எச்சரிக்கை

திருச்சூர், பிப். 9- திருப்புனித் துறை சிறீபூர்ணத்ர ஈசன் கோயிலில் பார்ப்பனர்க ளின் கால்களை கழுவி பாத பூஜை செய்வதாக வெளியான தகவல் குறித்து, கேரள மாநில தேவஸ்வம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் உடனடி அறிக்கை  அளிக் குமாறு உத்தரவிட்டுள் ளார்.

இதுகுறித்து கொச்சி தேவசம் போர்டு தலைவர் வி.நந்தகுமாருடன் அமைச்சர் தொலை பேசியில் அழைத்தும் விளக்கம் கேட்டார். 

மறுமலர்ச்சி கேர ளாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் இத்தகைய பழைமையான நடை முறைகளை தவிர்க்க தேவையான கடும் நட வடிக்கைகளை எடுக்கு மாறு அமைச்சர் உத்தர விட்டார். நாகரிக சமூகத் தால் ஏற்றுக்கொள்ள முடியாத இதுபோன்ற நடைமுறைகளை மற்ற தேவசம்போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களி லும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரிக்கையு டன்  கூறினார்.

No comments:

Post a Comment