பெரம்பலூர் மாவட்ட மேனாள் திராவிடர் கழகத் தலைவரும், பொதுக்குழு உறுப்பினரும், ஓய்வ றியா உழைப்பாளருமான மானமிகு ப. ஆறுமுகம் (வயது 77) பெரம் பலூர் மாவட்டம் துணிஞ்சிப்பாடியில் நேற்று (26.2.2022) மதியம் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம்.
ஒரு கிராமச் சூழலில் தன் மக்களை எல்லாம் உயர் படிப்பிற்கு உயர்த்தியவர். மகள் சாந்தி எம்.எஸ்ஸி. (வேளாண் துறை), மகள் டாக்டர் வளர்மதி எம்.டி., மகன் டாக்டர் சமத்துவச் செல்வன் ஆகி யோரா வர். குடும்பத் தலைவரின் மறைவால் பெருந் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் வாழ்விணையர் மரக தம்பாள் மற்றும் குடும்பத்தினருக் கும், உற்றார் உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத் தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை யும், ஆறுதலையும், தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர் ஆறுமுகம் அவர்களின் இயக் கப் பணிக்கு வீர வணக்கம்.
கி.வீரமணி
திராவிடர் கழகம்
தலைவர்,
சென்னை
27-2-2022
No comments:
Post a Comment