தமிழர் தலைவரிடம் வாழ்த்து பெரியார் உலக நிதி, நன்கொடை வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 27, 2022

தமிழர் தலைவரிடம் வாழ்த்து பெரியார் உலக நிதி, நன்கொடை வழங்கல்

விழுப்புரம் வெங்கடபதி-அல்லியம்மாள் அவர்களின் பெயர்த்தியும், கார்த்திகேயன்-தமிழரசி மகளுமான கா.திவ்யபிரியா அரசுத்தேர்வில் வெற்றி பெற்றதன் மகிழ்வாக, பெரியார் உலகம், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தலா ரூ. 10,000/- என ரூ.20,000த்தை  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கொடுத்து வாழ்த்துப் பெற்றார். மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், மாவட்ட இளைஞரணித் தலைவர் வெ.கார்வேந்தன், செம்மொழி சமத்துவமணி ஆகியோர் உடனிருந்தனர். (பெரியார் திடல், 26.2.2022).

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு - நே.சொர்ணம் அவர்களின் மகள் சொ.நே.அறிவுமதி தனது முதல் புத்தகமான 'ஆழினி' என்னும் புதினத்தை தமிழர் தலைவர் அவர்களிடம் , சென்னையில் பெரியார் திடலில் சந்தித்து அளித்து மகிழ்ந்தார்.விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூபாய் 1000த்தை அறிவுமதி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். அறிவுமதியுடன் அவரது தந்தை வா.நேரு,அவரது அண்ணன் சொ.நே.அன்புமணி உள்ளனர்.


No comments:

Post a Comment