முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மெகபூபா முப்தி பாராட்டு ஆதரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 9, 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மெகபூபா முப்தி பாராட்டு ஆதரவு


சிறீநகர், பிப். 9- நாடு தழுவிய அளவில் பாஜகவின் வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் நடவடிக் கையை முறியடிக்க எதிர்க்கட்சி களை ஒரே மேடையில்  நிறுத்தி, சமூகநீதிக் கொள்கையை முன் னெடுக்கும் தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு ஜம்மு-காஷ்மீர் மேனாள் முதல மைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமாகிய மெகபூபா முப்தி பாராட்டையும் ஆதரவை யும் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுக்கும் வகையில், அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு தொடங்கப்படும் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டா லின் அறிவித்திருந்தார். 

மேலும், இக்கூட்டமைப்பில் இணையுமாறு நாடுதழுவிய அள வில் பாஜக அல்லாத அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து  மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

‘பாஜகவின் வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் நடவடிக்கையை முறியடிக்க எதிர்க்கட்சிகளை ஒரே மேடையில்  நிறுத்தும் முயற்சியை முன்னெடுத்த மு.க.ஸ்டாலின் முயற்சியை பாராட்டுகிறேன். இந்த முன்முயற்சிக்கு  மக்கள் ஜனநாயகக் கட்சி முழு ஆதரவை வழங்குகிறது’ என்று தெரிவித்து உள்ளார்.  

மேலும் இதுதொடர்பாக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தை தமது டிவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment