இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 11 சதவீதம் அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 4, 2022

இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 11 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி, மார்ச் 4- இந்தியாவில் பெரும் பணக் காரர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 11 சதவீதம் உயர்ந் துள்ளது. 

    நைட் பிராங்க் என்ற சொத்து ஆலோசனை நிறு வனம் உலக அளவி லான சொத்து விவர அறிக்கையை தயாரித்துள்ளது. அதில் 3 கோடி டாலர் (ரூ.226 கோடி) மற்றும் அதற்கு மேல் நிகர சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களை பெரும் பணக்காரர் களாக பட்டியலில் சேர்த்துள்ளது. 

    இவர்களின் எண்ணிக்கை கடந்த 2020ஆம் ஆண்டு உலக அளவில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 828 ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 6 லட்சத்து 10 ஆயிரத்து 569 ஆக உயர்ந்துள்ளது. அதா வது, 9.3 சதவீதம் அதிகரித்து உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு 12 ஆயிரத்து 287 ஆக இருந்த பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 13 ஆயி ரத்து 637 ஆக அதிகரித்தது. ஒரே ஆண்டில் 11 சதவீதம் உயர்ந்துள்ளது.

    இந்தியாவில், பெங்களூரு வில்தான் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிக பட்சமாக 17.1 சதவீதம் உயர்ந் துள்ளது. அங்கு 352 பெரும் பணக்காரர்கள் உள்ளனர். டில்லி, மும்பை ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    பங்குச்சந்தையின் வளர்ச்சியும், டிஜிட்டல் புரட்சியும் தான் இந்தி யாவில் பெரும் பணக்காரர்கள் எண் ணிக்கை அதிகரிக்க காரணங்கள் என்று நைட் பிராங்க் நிறு வனம் தெரிவித்துள்ளது. 2026ஆம் ஆண் டுக்குள் பணக்காரர்கள் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரிக்கும் என்று கணித் துள்ளது. இதுதவிர, உலக அளவில் பெரும் கோடீசுவரர்கள் எண்ணிக்கை யில், அமெரிக்கா 748 பெரும் பணக் காரர்களுடன் முதலிடத்தில் இருக் கிறது. சீனா 554 பேருடன் 2ஆம் இடத் திலும், இந்தியா 145 பேருடன் 3ஆம் இடத்திலும் உள்ளன.


No comments:

Post a Comment