புதுடில்லி, மார்ச் 4- தமிழ்நாட்டில் அரி யலூர் மாணவி லாவண்யாவின் மரணத் திற்கு மதமாற்றம் காரணம் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மதமாற்றத்தாலேயே மாணவி லாவண்யா தற்கொலை செய்தார் என்று பாஜகவினரால் பரப்பப்பட்ட தகவல் மோசடியானது என்பது தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் அறிக்கையின்மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். மேலும், விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி, கடந்த ஜனவரி 9ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் மத மாற்றம் செய்ய - கொடுத்த அழுத்தம் தான் காரணம் என கூறப்பட்டது. ஆனால், இது வெறும் வதந்தி என்றும், பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரத்தை சிபிஅய் விசாரிக்க கடந்த ஜனவரி 31-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட் டது. சிபிஅய்-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஆனால், சிபிஅய் விசாரிக்கத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து சிபிஅய் விசாரணையைத் தொடங்கியது.
இந்நிலையில், அரியலூர் மாணவி லாவண்யா மரணம் தொடர்பான விசா ரணை அறிக்கையை தமிழ்நாடு தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை இயக்கு நருக்கு தேசிய குழந்தைகள் நல ஆணை யம் அனுப்பியுள்ளது. அதில், அரியலூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை. மேலும் மாணவியின் பெற்றோர், சகோதரருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment