அறுவை சிகிச்சை செய்யும் முன்பு தன்வந்திரி மந்திரமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 4, 2022

அறுவை சிகிச்சை செய்யும் முன்பு தன்வந்திரி மந்திரமாம்!

கருநாடகா மருத்துவமனையில் நடக்கும் பைத்தியக்காரத்தனமான செயல்

பாகல்கோட், மார்ச் 4- வடகிழக்கு கரு நாடகாவில் உள்ள பாகல் கோட் என்ற நகரத்தில் இருக்கும் குமரேஷ்வர் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை துவங்குவதற்கு முன்பு தன்வந்திரி மந்திரத்தைக் கூறிவிட்டு அறுவை சிகிச்சையை துவங்குவார்களாம், இதற்கு முன்பு கருநாடகா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இது போன்று முட்டாள்தனமான செயல் நடந்துள்ளது.

    ஆனால் அந்த நிகழ்வை யாரோ ஒருவர் படம் எடுத்து பெருமையோடு சமூகவலை தளத்தில் பதிந்துள்ளார். அதில் முக்கியமான ஈரல் பாதிப்பு தொடர்பான ஒரு அறுவை சிகிச்சை ஒன்றை நடத்தும் போது வேதமதத்தில் மருத்துவக் கடவுள் என்று கூறப்படும் தன்வந்திரி மந்தி ரத்தை ஒரு மருத்துவர் கூற மற்றவர்களும் அந்த மந்திரத்தை அவர் கூடவே சொல்லி முடித்த பிறகு அறுவை சிகிச்சையைத் துவக்கினார் களாம். அது வரை அறுவை சிகிச்சைக்கு மயக்கமருந்து கூட கொடுக்காமல் நோயாளியும் அந்த மந்திரத்தைக் கேட்கும்படி வைக்கின்றனர். 

    மேலும் "அறுவைசிகிச்சை யைச் செய்யும் போது உடல் மனம் மற்றும் ஆன்மாவிற்கு புதிய சக்தி கிடைக்கும் அதன் மூலம் அறுவைசிகிச்சை வெற்றி கரமாக முடியும்" என்று தமது நூலில் அந்த மருத்துவர் எழுதியுள்ளார். வட மொழியில் பாகல் என்றால் மன நோயாளி / பைத்தியக்காரர்களைக் கூறு வார்கள், கோட் என்றால் ஏரியா என்று பொருள்

    அந்த ஊர் பேர் பாகல் கோட் என்றுள்ளது பெயரும் இந்த ஊரில் நடக்கும் செயலும் ஒன்றாகவே இருக் கிறதே?

No comments:

Post a Comment