சென்னை, மார்ச் 4 - விமானத்தில் ‘பாசிச பாஜக ஒழிக’ என முழங்கிய மாணவியை கைது செய்த விவகாரத்தில், அவரது தந்தைக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தர விட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு அப் போதைய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக் குடிக்கு விமானத்தில் பயணம் செய் தார். அந்த விமானத்தில் ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியாவும் தனது பெற்றோருடன் பயணம் செய்தார். அப்போது, பாஜக ஆட்சி ஒழிக என முழக்கம் எழுப்பியதால் விமானத்தி லும், விமான நிலையத்திலும் தமி ழிசை, சோபியா ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட் டம் புதுக்கோட்டை காவல் நிலையத் தினரால் சோபியா கைது செய்யப் பட்டார். அதன்பின் சோபியா பிணை யில் வெளியே வந்தார்.
இந்நிலையில், சோபியாவின் தந்தை ஏ.ஏ.சாமி மாநில மனித உரிமை ஆணையத்தில் அளித்திருந்த புகாரில், விமான நிலைய காவல் ஆய்வாளர் நித்யா பதற்ற நிலையை தணிக்க முயன்ற போதும், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை, எங்களை காவல் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். விசாரணை என்ற பெயரில் மதியம் முதல் இரவு வரை தன் மகளை கொடுமைப்படுத்தினார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரை ஆணைய உறுப் பினர் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், சோபியாமீதான குற்றச்சாட்டுகள் சரியா, தவறா என்பதை குற்றவியல் நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். இருப்பினும், அவர் கைது செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை. முதல் தகவல் அறிக்கை இயந்திரத்தனமாக திருத்தம் செய்யப் பட்டு மாணவி கைது செய்யப்பட்டுள் ளார். சோபியா கைது மற்றும் விசாரணையின்போது அவரிடம் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கபட்ட சோபியா விற்காக அவரது தந்தை ஏ.ஏ.சாமிக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை விதிக்கக் கூடிய வழக்கு களில் கைது நடவடிக்கையில் ஈடு படும்போது, காவல் துறையினர் இயந் திரத்தனமாக செயல்படக்கூடாது என உரிய அறிவு றுத்தல்களை வழங் கும்படி தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கும் அறிவுறுத் தியுள்ளார்.
No comments:
Post a Comment