இந்தியாவில் 18.58 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 4, 2022

இந்தியாவில் 18.58 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்

புதுடில்லி, மார்ச் 4 ஜனவரி மாதத்தில் மட்டும்  18.58 லட்சம் இந்திய கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது. 

     வாட்ஸ் அப் குறுஞ்செய்திகள் மூலம் பிறர் மீது நடத்தப்பட்ட தாக்கு தல்கள் மற்றும் ‘ரிபோர்ட்’ வசதியில் பதியப்பட்ட புகார்கள் அடிப்படையில் இந்திய தகவல் தொழில் நுட்ப விதிகளின்(2021)படி கடந்த ஜனவரி 1-லிருந்து 31  ஆம் தேதி வரை 18 லட்சத்து 58  ஆயிரம் கணக்குகளை முடக்கிய தாக வாட்ஸ் ஆப் நிறு வனம் தெரி வித்துள்ளது. 

    இந்த காலக்கட்டத்தில்,  495  இந்திய கணக்குகளுக்கு எதிராக புகார்களைப் பெற்றதாகவும்,  அதில் 285 கணக்குகளை தடை செய்ய மேல்முறையீடு செய்யப்பட்டது, அவற் றில் 24  தடை செய்யப்பட் டுள்ளன என்று  தெரிவித்துள்ளதுடன், இதன் கார ணமாக  தனிநபர் பாதுகாப்பில்  வாட்ஸ் ஆப் நிறுவனம் முன்ன ணியில் இருப்பதாகவும்  கூறி யுள்ளது.

     வாட்ஸ்-அப் கணக்கு கள் முடக்கப்பட்டால், வாட்ஸ்-அப் சப் போர்ட் டை தொடர்பு கொண்டு, நம் கணக்கின் ஆதாரத்தை அளித்தால்,  பின்னர் மீண்டும் பயன் பாட்டுக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படு கிறது. 

    இதேபோல் கூகுள் நிறுவனமும் ஜனவரி மாதம் பதிவான  33,995 புகார்களின் அடிப் படையில் சர்ச்சையான உள்ளடக்கங்களைக் கொண்ட 1 லட்சத்திற்கும் அதிகமானப் பக்கங்களை  தகவல் தொழில்நுட்ப விதிகளின்(2021) படி கூகுளிலிருந்து நீக்கியுள்ள தாக தெரிவித்துள்ளது. 

    பிறரது அடையாளங் களைப் பயன்படுத்தல், பாலியல் உள்ளடக்க கருத்துக்கள், நீதிமன்ற உத்தரவு போன்ற காரணங் களால் 1,04,285 பக்கங் கள் அகற்றப்பட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது. 

    மேலும், அதே கால கட்டத்தில் ஆட்டோ மேட்டிக் வசதி மூலம் 4,01,374 உள்ளட க்கப் பதிவுகளையும் கூகுள் நீக்கி யுள்ளதாக கூறப்படு கிறது.

No comments:

Post a Comment