ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 4, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

விவசாயிகளின் அமைப்பான பாரதிய கிஷான் மோர்ச்சா தலைவர் திகாயத், பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி ஆகியோருடன் டி.ஆர்.எஸ். தலைவர் தெலங் கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் ஆலோசனை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

மகாராட்டிரா உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட் டோர் இடஒதுக்கீட்டுக்கு அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணைய பரிந்துரையை, உரிய புள்ளி விவரங்கள் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறி உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

.பி.,யில் அகிலேஷ் கூட்டணி வெற்றி பெற்றால், 2024இல் மோடி ஆட்சியை கவிழ்க்க முடியும், வாரணாசி யில் மம்தா பேச்சு.

இடஒதுக்கீடு தொடர்பாக மகாராட்டிரா பிற்படுத்தப்பட் டோர் ஆணைய அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்த  நிலையில்,  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக் கீட்டை மீட்டெடுப்பதற்கான சட்டப்பூர்வ விவரங்களை மகாராட்டிரா ஆராய அமைச்சரவை முடிவு.

சென்னையின் முதல் தாழ்த்தப்பட்ட சமூக பெண் மேயராக தி.மு..வின் ஆர்.பிரியா வரலாறு படைக்க உள்ளார்.

தி டெலிகிராப்:

உக்ரைனின் எல்லையான ருமேனியாவில் உள்ள புக்கரெஸ்டில் இருந்து இந்திய விமானப் படை விமானம் இந்திய மாணவர்களுடன் டில்லி வந்த பிறகு, உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற ஒன்றிய அரசு உதவாததால், இந்த நடவடிக்கையைஅரசு காப்பாற்றி யதுஎன்று எப்படி அழைக்க முடியும் என்று ஒரு மாணவி கேட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி வேலையில்லாத் திண் டாட்டத் தீர்வு குறித்து பேசுவது இருக்கட்டும், வேலையின்மைப் பற்றிக் கூட பேசுவதில்லை. இதுவே இந்திய இளைஞர்களிடையே கோபம் மற்றும் அமைதியின்மை அதிகரிப்பதற்கு முதன்மைக் காரணம் என்று ராகுல் காந்தி பேச்சு.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment