கோவை, மார்ச் 30- கோவையில் அமைச்சர் கே.எஸ். மஸ்தான் செய்தி யாளர்களிடம் கூறியதாவது, “இலங் கையில் பொருளாதார நெருக்கடி யால் எந்தவித அனுமதியும் இல் லாமல் 17 பேர் இதுவரை தமிழ்நாடு வந் துள்ளனர். மனிதநேயத்தோடு அவர்களை பாது காப்பாக ஒரு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு தேவை யான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
இலங்கைத் தமிழர்கள் அகதி களாக இந்தியா வருவது குறித்து, ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை அறிந்துதான் அதில் ஒரு சரியான முடிவுக்கு வர முடியும்.
உக்ரைனில் இருந்து 1,980 மாண வர்கள் தமிழ்நாடு அரசின் மூலம் இதுவரை அழைத்து வரப்பட்டுள்ளது. இன்னும் 33 பேர் அங்கேயே பாது காப்புடன் தங்கிக் கொள்வதாக தெரிவித்ததால், அவர்கள் அங்கு உள் ளனர். தமிழ்நாடு திரும்பிய மாண வர்கள் கல்வியை தொடர்வது குறித்து 3 விதமான கோரிக்கைகளை வைத் துள்ளனர். முதலாம் ஆண்டு மாணவர்கள் இங்கேயே படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும் என்றும், இறுதியாண்டு படித்த மாண வர்கள் சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், இடை நிலை ஆண்டு மாணவர்கள் தொடர்ந்து கல்வி தொடர வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாணவர்களின் கல்வி தொடர் பாக ஒன்றிய அரசுடன் கலந்து ஆலோசித்து முதலமைச்சர் ஒரு நல்ல முடிவை எடுப்பார். சொந்த வீடு இல்லாத சிறுபான்மையினர் உள்பட அனைத்துத் தரப்பினருக்கும் அரசு புறம் போக்கு நிலத்தில் வீடு கட்டிக் கொடுக்க நட வடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment