டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
பா.ஜ.க நமது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை தொடர்ந்து பலமுறை தாக்கி வருகிறது. இப்போது இந்த அடக்குமுறை ஆட்சியை நாம் ஒற்றுமையாக எதிர்த்துப் போராட வேண்டிய நேரம் இது என பா.ஜ., அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ள மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா, பா.ஜ.,வை எதிர்த்து போராட ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தி இந்து:
ஓபிசியின் தரவுக் கணக்கெடுப்புக்கான தகவல் அரசிடம் இல்லை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்.
தி டெலிகிராப்:
உள்ளாட்சி உள்ளிட்ட அரசியல் பதவிகளில் உச்ச நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்புக்கு எதிராக அரசமைப்புச் சட்டத் திருத்தம் வேண்டும் என மாநிலங்களவையில் பி.வில்சன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கோரிக்கை.
பாஜக ஆட்சியினர் வெறுப்பின் எரிபொருளில் வாழ்கிறார்கள்; அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவது மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதன் மூலம் அல்ல. சமூகத்தில் பிளவை உருவாக்கி, உணர்வுகளை தூண்டி வெற்றி பெறுகிறார்கள். குடிமக்களிடையே உள்ள பகையே அவர்களின் பலம். எனவே எங்கள் சொற் பொழிவு அவர்களின் தேர்தல் வாய்ப்புகளை பாதிக்காது, என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா வாதிட்டார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment