சென்னை, மார்ச் 30- தமிழ் நாட்டில் நேற்று முன்தினம் தினசரி கரோனா பாதிப்பு 33- ஆக பதிவாகியிருந்த நிலையில், நேற்று (29.3.2022) தொற்று பாதிப்பு 37 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள் ளது. கடந்த பல வாரங்களாகவே தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இரட்டை இலக்க எண்களிலேயே தினசரி தொற்று பாதிப்பு பதிவாகி வருவது மக்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.
இந்த நிலையில், இன்றைய கரோனா பாதிப்பு நேற்றை ஒப் பிடுகையில் சற்று அதிகரித்துள் ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத் துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தமிழ்நாட்டில் மேலும் 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 64 பேர் குணம் அடைந் துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை யில் உள்ளவர்கள் எண்ணிக்கை 339 - ஆக குறைந் துள்ளது.
கரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை. சென்னையில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment