ஆத்தூர் திராவிடர் கழக பெரியார் பெருந்தொண்டர், தீவிர கடவுள் மறுப்பாளர் பெரியசாமி (வயது 86) கடந்த 20.3.2022 அன்று மறைவுற்றார். நேற்று (26.3.2022) காலை 11 மணியளவில் ஆத்தூர் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் நீ சேகர், மாநில இளைஞரணி துணை செயலாளர் அ.சுரேஷ், வாழப்பாடி சிங்கிபுரம் கூத்தன், மண்டல இளைஞரணி செயலாளர் கூ.செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் ப . வேல்முருகன் ஆகியோர் நேரில் சென்று அவர் படத்திற்கு மரியாதை செலுத்தினர். மறைந்தபெரியசாமி அவர்களின் துணைவியார் அஞ்சலம்மாள், மகன்கள் கர்ணன், சக்கரவர்த்தி, பேரன், பேத்திகள்-முருகேசன், பிரசாத், இந்து பிரியா, வெண் ணிலா உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கழகத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் ஆறுதலை தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment