நியூயார்க், மார்ச் 7- ரசியாவின் படையெடுப்பை எதிர் கொள்வதற்காக உக்ரை னின் பன்னாட்டு பாது காப்புப் படையில் சேர வெளிநாட்டினருக்கு அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்து வரு கிறார்.
அந்த வகையில் அமெ ரிக்காவை சேர்ந்த 3 ஆயி ரத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஜெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று ரசியப் படைகளுக்கு எதிராக சண்டையிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலா னோர் ஈராக், போஸ்னியா ஆகிய நாடுகளில் போர் முனையில் சண்டையிட்ட அனுபவமுடைய வர்கள் என்று கூறப்படு கிறது.
அமெரிக்காவை தவிர, ஜார்ஜியா மற்றும் பெலா ரஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர் களும் உக்ரைனின் பன் னாட்டு பாதுகாப்புப் படை யில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தக வல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment