தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த வரலாற்று வெற்றியை தங்களது ஒன்பது மாத கால ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அது என்ன ‘திராவிட மாடல்’
ஒரு சொல் - அவர் வேறு எந்த சொல்லையும் பயன்படுத்தி இருந்தால் அது பத்தோடு பதினொன்றாக போயிருக்கும், வரலாற்றில் கம்யூனிஸ்டுகள் தங்களது ஆளுமையை பரந்துவிரிந்த ரஷ்ய நிலப்பரப்பில் உறுதிசெய்தனர், அதுவும் ஒரு வரலாற்று வெற்றி தான்.
ஆனால் இந்தியா எங்கும் ஆரிய நச்சுப்பாம்பு சுற்றி வளைத்துக் கொண்டு இருக்கும் போது தென்றல் வீசும் திராவிட பூமியில் திராவிட மாடல் ஆட்சி என்ற வார்த்தை இந்தியாவை திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.
ஓர் ஆட்சியாளர் தங்களுடைய கொள்கை முடிவை அறிவிப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதள முகப்பில் நான் திராவிடர் வழிவந்தவன் என்று பெருமை பட தனது அடையாளம் இதுதான் என்று பதிந்தார். அறிஞர் அண்ணா
“I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian என்று இந்திய நாடாளுமன்றத்தில் கூறினார். திராவிடன் என்ற சொல்லைக் கேட்டதுமே நாடாளுமன்றம் பதறியது. காரணம் திராவிடம் என்பது ஆரியத்திற்கு நேர் எதிர் ஆகும். அந்த ஒற்றைச்சொல் தான் பார்ப்பனர்களின் தொண்டையில் சிக்கிய முள்ளாக இன்றும் உள்ளது.
இது எங்கள் பூமி என்று கூறினால், ‘நாங்களும் இந்த பூமிதானே’ என்று கூறுவார்கள். இது திராவிட பூமி என்று கூறினால் விக்கித்துப் போவார்கள்.
தாய்மொழியே இல்லாத பார்ப்பனர்கள் - இங்கிருந்தால் தமிழன் என்கிறார்கள். மும்பை சென்றால் மராட்டியன் என்கிறார்கள். வங்கம் சென்றால் வங்காளி என்கிறார்கள். ஆனால் நமக்கு காந்தாரம் முதல் கிழக்கு வங்க சதுப்பு நிலம் வரை, பனிசூழ் மலை தொடங்கி மூன்று கடல்களும் தாலாட்டும் குமரிவரை இது திராவிட பூமி ஆகும். இதை வரலாறு சொல்கிறது, சான்றுகள் இன்றும் உள்ளது, ஹரப்பா - மொகஞ்சதாரோ அகழாய்வில் கிடைத்த பொருட்களும் அவர்களின் எழுத்துருவங்களும் கீழடியில் கிடைக்கும் பொருட்களும் ஒரே மாதிரி உள்ளன. அதனால்தான் இது முழுமையான திராவிட பூமி என்கிறோம். அந்த அடையாளத்தோடு தமிழ்நாட்டை ஆள்கிறார் முதலமைச்சர்.
இதன் தொடர்ச்சியாகத்தான் “கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கும் நற்சான்றுதான் இந்த மாபெரும் வெற்றி. தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கக் கூடிய அங்கீகாரம் இது,” என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.
2021இல் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, ‘திராவிட மாடல்’ என்ற வார்த்தையை முதலமைச்சர் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. ரகுராம் ராஜன், எஸ்தர் தஃப்லோ, அரவிந்த் சுப்பிரமணியன், டாக்டர் எஸ்.நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், எஸ்.நாராயணன் எழுதிய “Dravidian Years” நூலை மேற்கோள்காட்டிப் பேசினார்.அரசியல், வளர்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றின் இடையில் நெருக்கமான, உயிர்ப்புள்ள ஓர் உறவை உருவாக்குவதில் கலைஞர் யுகம் வெற்றி கண்டது. பிற்காலத்தில் அது போன்ற பல திட்டங்களை உருவாக்குவதற்கு அது அடிப்படையாக அமைந்தது.”
இதை குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இதுதான் திராவிட மாடல். எல்லா சமூகங்களுக்குமான வளர்ச்சி. எல்லா மாவட்டங்களையும் சமூகத்தின் எல்லா பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. இது தான் திராவிட மாடல். எல்லோரையும் உள்ளடக்கிய இந்தப் பாணியில் தமிழ்நாடு வளர வேண்டுமென நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.
“மேலும், தொழில்துறை வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வியில் சாதனை போன்ற எல்லாமும் ஒரே சமயத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இருக்க முடியாது. சமூக முன்னேற்றமும் இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல் ஆகிய அய்ந்தும் முன்னேற்றமடைய வேண்டும். அம்மாதிரியான ஒரு வளர்ச்சியைத்தான் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் காண விரும்பினர்.
அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி” என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.
பெரியார் எதையெல்லாம் இந்த சமூகத்தில் மாற்ற வேண்டுமென நினைத்தாரோ அதன் அடிப்படையில் அமைந்த அரசுதான் இந்த அரசு என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்
ஆகவே தற்போது கிடைத்த வெற்றியை இந்த அரசின் திட்டங்களுக்கு, பெரியாரின் கொள்கைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக பார்க்கிறார். “பிறப்பொக்கும் - எல்லார்க்கும்; எல்லோருக்கும் சமவாய்ப்பு. அதைத்தான் திராவிட மாடல் பாணி அரசு என முதலமைச்சர் குறிப்பிடுகிறார்”
இப்போதுஅழுத்தமாக முதலமைச்சர் ஏன் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்? இப்போது இந்தியா முழுமைக்கும் ஆரிய வார்ப்பான பா.ஜ.க. நெருக்கிக் கொண்டு இருக்கிறது. இவர்களால் நம் உரிமைகள் பறிக்கப்பட்டன. நம் வளங்கள் சுரண்டப்பட்டன. எல்லாவற்றிலும் ஒருமையைத் திணிக்க முயன்றார்கள். அதற்கு எதிரான மாடலாகத்தான் நம்முடைய மாடலை முன்வைக்க வேண்டியிருக்கிறது.
முதல்வரின் திராவிட மாடல் கருத்தாக்கம் மீதான தமது பார்வையை விளக்கினார். நீதி, சம நீதி, சுயமரியாதை, கூட்டாட்சி, மொழிப் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிடம் சார்ந்த கொள்கையை திமுக நீண்ட காலமாகவே முன்வைத்து வருகிறது; அதன் தொடர்ச்சிதான் தற்போது திராவிட மாடல்,”ஆகும்
சமூக நீதி, சம உரிமை என்ற திசையில் தி.மு.க. தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது. கலைஞர் ஆட்சியின்போது, பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. அதேபோல, மொழி பாதுகாப்பு, கூட்டாட்சி போன்றவற்றில் கவனம் செலுத்தினார்.
ஒன்றிய அரசு - மாநில அரசு இடையிலான உறவுகள் குறித்து பரிந்துரைகளை அளிக்க ராஜமன்னார் குழுவை அமைத்தார். இப்போது மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைச் செயல்படுத்தினார். பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் பயன்பட்டது. இதையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து திராவிட மாடல் என குறிப்பிடுகிறார் ப்ரியன்”. தவிர, முன்பில்லாத வகையில் தொடர்ந்து திராவிட மாடல் என்ற தத்துவத்தை முன்வைக்க வேண்டிய தேவையும் இப்போது இருக்கிறது. “ஆர்.எஸ்.எஸ். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என கூறி வருகிறது. இந்தச் சூழலில்தான் இந்தத் தத்துவத்தை திமுக முன்வைக்க வேண்டியிருக்கிறது. காரணம், ஒரு தத்துவத்தை இன்னொரு தத்துவத்தின் மூலம்தான் எதிர்க்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியை இன்னொரு அரசியல் கட்சியாக எதிர்கொண்டால் தோல்விதான் கிடைக்கும்.
ஆகவேதான் திராவிட மாடல், திராவிடன் ஸ்டாக் என்பதை திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. பா.ஜ.க. தனது தத்துவமாக இந்துத்துவத்தை முன்வைக்கிறது, அவர்களால் துணிச்சலாக திராவிடத்திற்கு எதிராக ஆரியம் என்பதை முன் வைக்கமுடியாது. ஆகையால் தான் இந்துத்துவா என்று பெயரை மாற்றிக் கொண்டு வருகின்றனர்.
திமுகவில் இருந்து அ.தி.மு.க. பிரிந்த போதே அதன் திராவிட கொள்கைப் பிடிப்பை மெல்ல மெல்ல இழந்துவிட்டது
அதனை முன்வைப்பதற்கான ஒரே கட்சியாக தி.மு.க. தான் இருக்கிறது. இதனால்தான் திரும்பத் திரும்ப மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் என்பதை முன்வைக்கிறார். .திராவிடக் கொள்கையில் அடிப்படையிலான அரசு என்பது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட வார்த்தைதான் என்றாலும், ‘திராவிட மாடல்’ என்பது அண்மையில்தான் குறிப்பாக 2021ஆம் ஆண்டுக்குப் பிறகே அதிகம் பிரபலமானது.
கடந்த ஆண்டு சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர்களான ஏ. கலையரசனும் எம். விஜயபாஸ்கரும் எழுதி The Dravidian Model என்ற புத்தகம் வெளியானது. அந்த புத்தகம் வெளியான பிறகு, 1967க்குப் பிறகு தமிழ்நாட்டில் நிகழ்ந்த வளர்ச்சி பாணியைக் குறிப்பிட ‘திராவிட மாடல்’ என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது.திராவிட மாடல் என்றால் என்ன என்பது, அந்தப் புத்தகத்திலேயே விளக்கப்பட்டிருக்கிறது
“பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த மாநிலங்கள், மனிதவளக் குறியீடுகளில் பின்தங்கியிருக்கின்றன. மனிதவள குறியீடுகளில் மேம்பட்ட மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் அந்த அளவுக்கு மேம்படவில்லை. ஆனால், தமிழ்நாடு இந்தப் போக்கை முறியடித்திருக்கிறது. இங்கு மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியும் மனிதவள மேம்பாடும் இருக்கிறது. ஜாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுக்கு மாறாக மக்களை ஒன்று திரட்டி, தமிழ்நாடு அடைந்திருக்கும் சமூகப் பொருளாதார வளர்ச்சியை இந்தப் புத்தகம் விளக்குகிறது” என திராவிட மாடல் பற்றி அதில் விவரிக்கப்பட்டுள்ளது.
சமூகநீதிக்கான அமைப்பைத் துவங்கி அதற்கு ஆதரவான அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொள்ள முதலமைச்சர் நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க.விற்கு எதிரான நிலைகொண்ட ஆட்சியாளர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அதற்கு சிறப்பு மிக்கவரவேற்பு கிடைத்துள்ளது. முதலமைச்சரின் நூல் வெளியீட்டுவிழா நடைபெற்ற போது, நாடுமுழுவதும் பா.ஜ.க.விற்கு எதிரான சிந்தனை கொண்ட தலைவர்கள் பங்ககேற்று உள்ளனர். இந்த முயற்சியின் வெற்றி சூரிய அதிகாரத்திற்கு இறுதியைத் தரும்.
No comments:
Post a Comment