சென்னை மாநகராட்சி மேயராக ஒடுக்கப்பட்டோர் சமூகப் பெண் பிரியா எம்.காம்., பதவியேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 4, 2022

சென்னை மாநகராட்சி மேயராக ஒடுக்கப்பட்டோர் சமூகப் பெண் பிரியா எம்.காம்., பதவியேற்பு

சென்னை, மார்ச் 4  சென்னை மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட தி.மு..வைச் சேர்ந்த பிரியா எம்.காம்., இன்று (4.3.2022) பதவி ஏற்றார்.

360 ஆண்டுகாலம் பழைமை வாய்ந்த சென்னை மாநகராட்சியில் இதுவரை 46 மேயர்கள் பதவி வகித்துள்ளனர். ஆங்கிலேயர் கால மேயர்களைத் தொடர்ந்து தமிழர்கள் மேயராக பதவி வகித்த சிறப்பும் உள்ளது.

சென்னை மேயராக பதவி ஏற்கக்கூடிய வர்களுக்கு பல்வேறு சிறப்புகள் வழங்கப்படு கின்றன. சென்னை மாநகராட்சியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் மேயராக முதன் முதலாக பிரியா எம்.காம்., பதவி ஏற்றுள்ளார்.

மேயராக தேர்வு செய்யப்பட்ட அவரை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மேயரின் இருக்கைக்கு அழைத்து வந்து அமர வைத்தார். மேயருக்கான அங்கியை வழங் கினார். அதன்பின்னர் செங்கோல் வழங்கப் பட்டது.

அதனைத்தொடர்ந்து மேயர் அணி யக்கூடிய 105 பவுன் தங்க சங்கிலியை, மேயர் பிரியாவுக்கு ஆணையர் அணிவித்தார். சென்னை மேயராக பணியாற்றக்கூடிய மேயர்கள் தங்கச் சங்கிலி அணிவது வழக்கம்.

கடந்த 6 ஆண்டுகளாக மேயர் தலை மையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் அந்த தங்கச் சங்கிலி வங்கியில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது புதிய மேயர் பதவி ஏற்பதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன்னதாக மேயர் அணியக்கூடிய தங்கச் சங்கிலி வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது.

தங்கச் சங்கிலி, செங்கோலுடன் மேயர் பிரியா மேயர் இருக்கையை அலங்கரித்தார். புதிய மேயராக பதவியேற்ற பிரியாவுக்கு அவரது அளவுக்கு ஏற்ப புதிய அங்கி தயார் செய்யப்படுகிறது. இன்று தற்காலிகமாக மாற்று அங்கி வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் பிரியா பதவியேற்று அந்த இருக்கையில் அமர்ந்தவுடன் அனைத்து கவுன்சிலர்களும் கைத்தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மேயர் பயன்படுத்துவதற்கு வழக்கமாக மாநகராட்சி சார்பில் கார் வழங்கப்படும். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய மேயர் பொறுப் பேற்றதைத் தொடர்ந்து அவருக்கு புதிய கார் வாங்கப்பட்டுள்ளது. ஒரு சில நாள்களில் புதிய கார் அவருக்கு வழங்கப்படும் என்று தெரி கிறது.

No comments:

Post a Comment