ரஷ்யா உக்ரைன் மீது 24 பிப்ரவரி தாக்குதலில் இறங்கியது, பிப்ரவரி 13 ஆம் தேதி சிறிய நாடான இலங்கை, உக்ரைனில் படிக்கும் தங்களது மாணவர்களை அமெரிக்காவிடம் பேசி அவர்களது குடிமக்களோடு தங்களது குடிமக்கள் மற்றும் மாணவர்களை துருக்கி மற்றும் கிரீஸ் கொண்டுவந்து அங்கிருந்து கொழும்புவுக்கு பத்திரமாக அழைத்துவந்துவிட்டனர். அதே போல் பாகிஸ்தான் சிறப்பு விமானத்தை கொண்டு சென்று தனது மாணவர்கள் மற்றும் குடிமக்களை உக்ரைனில் இருந்து அழைத்துவந்துவிட்டனர்.
ஆனால் இந்தியா போர் நடக்கும் ஒரு நாளுக்கு முன்பு மூன்று விமானங்களை ஏற்பாடு செய்துள்ளோம். வரவேண்டியவர்கள் வந்துவிடுங்கள் என்றார்கள். விமான பயணச்சீட்டின் விலை 1.43 லட்சம் வரை இருந்தது, வெறும் 23 ஆயிரமாக இருந்த விமான பயணச்சீட்டின் விலை எப்படி இவ்வளவு அதிகப்படுத்தினார்கள் ஏன் என்று இந்திய அரசு கேட்கவில்லை. மேலும் சுமார் 70000 பேருக்கு வெறும் 3 விமானங்கள் போதுமானதுதானா என்று அரசுக்குத் தெரியாதா?
இதோ போர் துவங்கி விட்டது, மிகவும் கோரத்தாக்குதல் நடந்துகொண்டு இருக்கிறது, கருநாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற இந்திய மாணவர் ஒருவர் ஏவுகணைத் தாக்குதலில் இறந்துவிட்டார்.
போர் அபாயம் மிகுந்த கார்கிவ் மற்றும் கிவ் நகரின் பதுங்கு குழிகள் மற்றும் சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்தில் பல நூறு இந்திய மாணவர்கள் உயிருக்கு பயந்து பதுங்கி இருக்கின்றனர். போலந்து நாட்டின் எல்லைகளுக்குச் செல்ல பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து செல்கின்றனர். நாள் தோறும் அங்குள்ள மாணவர்கள் கண்ணீரோடு காணொலிகள் மூலம் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று அழுதவாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் இணை அமைச்சர்கள் மணிப்பூர் தேர்தலில் பரப்புரைக்குச் சென்று அங்குள்ள ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் 43 வகை உணவுப்பொருட்களோடு உணவு உண்டு கொண்டுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். கர்மவினை குறித்து எப்போதுமே பேசுகிறது.
அதன்படி உக்ரைனில் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உணவிற்குத் திண்டாடிக்கொண்டு இருக்கும் போது அது அவர்களின் கர்மவினையை அனுபவிக்கிறார்கள் என்ற மனநிலையில் இருக்கும் ஒன்றிய அமைச்சர்கள் 43 வகை உணவுப்பொருட்களோடு விருந்துண்டு தங்களது கர்ம பலனை அனுபவிக்கின்றனரோ?
No comments:
Post a Comment