புதுடில்லி, மார்ச் 4 7 துணைத் திட்டங்கள் உள்ளடங்கிய இந்த திட்டத்தை 2025-- 2026ஆ-ம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான ஒப்புதலை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
புலம்பெயர்ந்த, நாடு திரும்பிய இலங்கை தமிழர்கள், பாகிஸ்தான் ஆக் கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த காஷ்மீரிகள், 1984ஆம் ஆண்டு சீக்கியர் களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண மற்றும் மறுவாழ்வுப் பணிகள் ஒரு பொதுவான திட்டத்தில் ஒன்றிய அரசால் மேற் கொள்ளப்படுகின்றன.
இதற்காக ஆயிரத்து 452 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 7 துணை திட்டங்கள் உள்ளடங்கிய இந்த திட்டத்தை நடப்பு 2021--2022ஆம் ஆண்டில் இருந்து வருகிற 2025--- 2026ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான ஒப்பு தலை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
இதன்படி, புலம்பெயர்ந்தோர் ஒரு நியாயமான வருமானம் ஈட்டவும், பொது பொருளாதார நடவடிக்கைகளில் அவர்களை இணைத்துக்கொள்ளவும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் உதவி வழங்கப்படும்.
திரிபுரா மாநிலத்தில் உள்ள முகாம் களில் தங்கியிருக்கும் புரு அகதிகளுக்கும், பயங்கரவாத வன்முறைச் செயல்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கும் நிதி மற்றும் பிற உதவிகள் வழங்கப்படும்.
மேற்கு வங்காளத்தில் முன்பு வங் காள தேச கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் மேம்பாட்டுக்கும், அந்நாட்டில் இந்தியா வின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து திரும்பியவர்களின் மறு குடி யமர்வு பணிகளுக்கும் நிதியுதவி வழங் கப்படுவதாக ஒன்றிய அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment