நூலை வெளியிட்டு கழகப்பொருளாளர் வீ.குமரேசன் உரை
சென்னை, மார்ச் 4- பகுத்தறிவு எழுத் தாளர் மன்றத்தின் தலைவர் முனை வர் வா.நேருவின் மகள் சொ.நே.அறிவுமதி எழுதிய 'ஆழினி 'என் னும் புதினத்தின் வெளியிட்டு விழா 26.02.2022 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் நடைபெறுகின்ற 45ஆவது புத்தகக் கண்காட்சியில் எப்-6 அரங்கில் உள்ள எமரால்டு/எழிலினி பதிப் பக அரங்கில் நடைபெற்றது. விழா விற்கு வந்திருந்த அனைவரையும் வா.நேரு வரவேற்றார். புத்தகத் தினை திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் வெளி யிட்டு உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில்" ஆழினி என்னும் இந்தப் புதினத்தை எழுதி யிருக்கும் அறிவுமதி எங்கள் வீட் டுப் பிள்ளை. இருக்கும் வேலைப் பளுவில், புத்தக வெளியீடு என்று நேரு சொன்னபோது யோசித்தேன். ஆனால் நமது வீட்டுப்பிள்ளை அறிவுமதி எழுதியது என்று சொன் னவுடன் சரி என்று சொன்னேன். வெளிப்படையாக பேசுகிறேன். இந்தப் புதினத்தில் ஆழினி என் னும் பெயர். ஆழி என்றால் கடல். கடல் மடந்தை என்பதற்கு ஆழினி என்று பெயர் சூட்டியிருக்கிறார். அவருடைய காதலன் பெயர் ஆழி யன். நல்ல தமிழ்ப்பெயர். இங்கு நான்,நேரு,ஒளிவண்ணன் எல்லோ ரும் இருக்கிறோம். நாங்கள் பகுத் தறிவாளர்கள். கடல் மடந்தை என்று ஒன்று இருக்கமுடியுமா? இல்லை என்பது தெரியும். ஆனால் கற்பனையாக ஒரு கடல் மடந் தையை, ஆழினி என்னும் பெயரில் படைத்து, சங்கத்தமிழையும், நகைச் சுவையையும் இணைத்து விறுவிறுப் பாக புதினமாகக் கொடுத்துள்ளார். அணிந்துரை கொடுத்துள்ள பேராசி ரியர்கள் மிகச் சிறப்பாக இந்தப் புதினத்தின் சிறப்புகளைக் குறிப் பிட்டுள்ளார்கள்.
கதை ஆரம்பிக்கும்போதே 'என்ன மச்சான் குழம்பு வச்சிட்டியா?' என்றுதான் ஆரம்பிக்கிறது. ஒரு ஆண் மீன் குழம்பு வைப்பதாகத்தான் கதையை ஆரம்பித்திருக்கிறார். ஆண்கள் சமைக்கவேண்டும் என் பது பெரியாரியல் கருத்து. அப்படி ஆண் சமைப்பதாக ஆரம்பமாகிறது கதை. மீன் குழம்பு ஆறியபின் ‘பழசாக' சாப் பிட்டால்தான் நன்றாக இருக்கும் என்று ஒரு உரையாடல் வருகிறது. கதையை முழுவதுமாக நான் படிக்கவில்லை. படித்த அளவி லேயே மிகச்சிறந்த படைப்பாக நான் உணர்கிறேன். எங்கள் தலை வர் அய்யா ஆசிரியர் வீரமணி அவர்கள் ஒரு புத்தகத்தை வேக மாகப் படித்துவிடுவார்கள். கொஞ்ச நேரத்தில் படித்து முடித்ததை, விரி வாகவே அய்யா அவர்கள் விவரிப் பார். நான் மெல்ல படிப்பவன். நிறுத்தி, நிறுத்திப் படிப்பவன். ஆத லால் முழுமையாகப் படிக்கவில்லை.
இந்த நூலின் ஆசிரியர் அறிவு மதி மதுரை மாவட்டம் சாப்டூரைச் சார்ந்தவர். சாப்டூரின் அருகில் உள்ள தே.கல்லுப்பட்டியில் நான் வங்கியில் வேலை பார்த்தேன். அப்போது அங்கு இருக்கும் காந்தி ஆசிரமத்தில் செயலாளராக அய்யா முனியாண்டி இருந்தார். அவரோடு பழகக்கூடிய வாய்ப்பு கிட்டியது. அவர் வினோபாவோடு நட்பு உடையவர். வினோபா அவர்கள் பன்மொழிகளை அறிந்தவர். அவர் முனியாண்டி அய்யாவைப் பார்க்கும்போது 'வாருங்கள் அம் விகுதி, அன்விகுதி மொழிக்காரரே' என்று அழைப்பாராம். தமிழ் மொழியின் சிறப்பு இந்த அன் விகுதி. இந்த அன் விகுதியில் முடி யும் பெயர்கள் இந்தப் புதினத்தில் கதாபாத்திரப் பெயர்களாக உள் ளன. புவனன் என்னும் பெயர் போல.தூய தமிழ் அதிலும் சங்கத் தமிழ் பேசக்கூடிய ஆழினியைப் படைத்த அறிவு மதிக்கு வாழ்த்து கள். இது முதல் முயற்சி என்பது போலத்தெரிய வில்லை. இன்னும் நிறைய எழுத வேண்டும். நேரடி பிரச்சாரம் வேண்டாம். இந்த மாதிரி கலை வடிவத்திலேயே கொண்டு வரவேண்டும்" என விரும்பி இந்த நூலை வெளியி டுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகி றேன் என்று நூலை வெளியிட்டார்.
புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு ‘வாருங்கள் படிப்போம்' என்னும் நூல் திறனாய்வு குழுவின் ஒருங்கி ணைப்பாளர் பேரா.உமா.மகேஸ் வரி அவர்கள் உரையாற்றினார்.அவர் தனது உரையில், ‘வாருங்கள் படிப்போம்' என்னும் எங்கள் குழு வில் முனைவர் வா.நேரு, அவரது மகன் சொ.நே.அன்புமணி, மகள் சொ.நே.அறிவுமதி மூவருமே உறுப் பினர்களாக உள்ளனர். சிறுவயதில் இருந்து வாசிக்கும் சூழலில் வளர்ந் ததால் இப்படி ஒரு படைப்பை அறிவுமதியால் கொடுக்க முடிந்தது என்று நினைக்கிறேன். இன்னும் பல படைப்புகளை படைக்க அறிவு மதியை வாழ்த்துகிறேன் " என்று குறிப்பிட்டார்.
நிகழ்வில் எழிலினி பதிப்பகத் தின் உரிமையாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், நல் லினி ஒளிவண்ணன், மேனாள் அமைச்சர் ஆலடி அருணா அவர் களின் மகனும் அய்ன்ஸ்டீன் கல் லூரி தாளாளருமான ஆலடி எழில் வாணன், சொ.நே.அன்புமணி, அரும்பாக்கம் சா.தாமோதரன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மதுரை பேரா. மகேந்திரன், வெண்ணிலா மகேந்திரன், கயல், ஓ.ராமச்சந்திரன், ராஜபிரியா, ‘வாருங்கள் படிப் போம்' குழுவின் உறுப்பினர்கள் இளங்கோ, குமரன், சித்ராதேவி வேலுச்சாமி, மலர்விழி, அர்ஷா மனோகரன், பூங்கோதை,உமா மித்ரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment