புதுடில்லி, மார்ச் 4 உக்ரைனில் இருந்து வரும் பயணிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு விலக்கு அளித்து ஒன் றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய சுகா தாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள தாவது:
உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ஒன்றிய அரசு மீட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்ப தற்கு வெளியுறவு அமைச்சகம், சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம், உள்துறை அமைச் சகம், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்து அனைத்து உதவிகளையும் செய்து வருகின் றன.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணி களுக்கு கட்டாயமாக்கப்பட்டி ருந்த விதிமுறைகளை மனிதாபி மான அடிப்படையில் உக்ரை னில் இருந்து வரும் பயணிகளுக்கு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் திருத்தி அமைத்துள்ளது.
உக்ரைன் நாட்டில் ஏற்பட் டுள்ள அரசியல் குழப்பத்தால் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக மாணவர்கள் சிக்கி தவிக்கின்றனர். உக்ரைனிலி ருந்து விமானங்கள் வர அனு மதிக்கப்படாததால் போலந்து, ருமேனியா, ஸ்லேவாக்கியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் உக்ரைனில் உள்ள இந்தியர் களை வெளியேற்ற ஏற்பாடு களை செய்துள்ளன. பின்னர் ஆபகூட்டுறவு நியாயவிலைக் கங்கா விமானங்கள் என்ற திட்டத்தின் கீழ் அந்தந்த நாடு களில் இருந்து இவர்கள் இந்தி யாவுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இந்தியாவுக்கு வருவதற்கு முன் ஏர்-சுவிதா இணையப் பக்கத்தில் விமானப் பயணத் திற்கு முன் தொற்றின்மைக்கான பரிசோதனை அறிக்கை அல்லது முழுமையாக தடுப்பூசி செலுத் தியிருப்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றைக் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியிருப்பவர்கள் இந்தி யாவில் விமான நிலையத்திற்கு வந்தபின் அடுத்த 14 நாட்களுக்கு தங்களின் உடல்நிலையை அவர்களே கண்காணித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டு, வெளியேற அனுமதிக்கப் படுவார்கள்.
இந்தியாவிற்கு வருவதற்கு முன் ஆர்டிபிசிஆர் பரிசோ தனை அறிக்கையை ஒரு பயணி அளிக்காமல் அல்லது கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை முழுமையாக நிறைவு செய் யாமல் வரும் போது அவர்கள் தங்களின் ரத்த மாதிரிகளை சமர்ப்பிக்க அனுமதிக்கப் படுவார்கள். அதே சமயம் 14 நாட்களுக்கு தங்களை தாங்களே கண்காணித்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுவார்கள்.
பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு விதிமுறை களின்படி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment