மயிலாடுதுறையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கு சிலை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 29, 2022

மயிலாடுதுறையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கு சிலை!

மயிலாடுதுறை,மார்ச்29- மயிலாடுதுறை வரதாச் சாரியார் பூங்காவில்    சமூக சீர்திருத்தவாதி மூவலூர் இராமாமிர்தம் அம்மை யார்  அவர்களின் வெண்கல சிலை அமைப் பதற்கான இடத்தை,  செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனை வர்  வீ.ப.ஜெயசீலன் 26.03.2022 அன்று ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட் டம் மயிலாடுதுறை நக ராட்சிக்குட் பட்ட வர தாச்சாரியார் பூங்காவில்;   பெண் சமூக சீர்திருத்த வாதி, எழுத்தாளர்,  தேவ தாசி ஒழிப்பு  இயக்க மற் றும்   திராவிட இயக்கத் தின்  அரசியல் முன்னோடி, மூவலூர் இராமா மிர்தம் அம்மை யாருக்கு  6.9.2021 அன்று  முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அவர் களின் உத்தரவுப்படி தமிழ்நாடு சட்டமன்றத் தில்  செய்தி மக்கள் தொடர்புத்துறை மானிய கோரிக் கையின் போது  செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மூவலூர் இராமாமிர்தம் அம்மை யாருக்கு  சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து  26.3.2022 அன்று மயி லாடுதுறையில் நகராட்சிக்குட் பட்ட வர தாச்சாரியார் பூங்காவில் மூவலூர் இராமாமிர்தம் அம்மை யாரின்   வெண்கல சிலை அமைக்க இடம் தேர்வு செய்வது குறித்து செய்தி மக்கள் தொடர் புத்துறை இயக்குநர் வி.ப. ஜெயசீலன்   நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வின்போது  மயிலாடு துறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ஆ.ரவிச் சந்தி ரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்   அஸ் வின்குமார், பொதுப் பணித்துறை   அலு வலர் கள் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment