புவனேஸ்வர், மார்ச் 29 - ஒடிசா மாநில நகர்ப்புற உள்ளா ட்சித் தேர்தலிலும் ஆளும் பிஜூ ஜனதாதளம் (BJD) கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. பாஜக மீண்டும் படுதோல்வி அடைந் துள்ளது. ஒடிசா மாநிலத்தில், கடந்த பிப்ரவரியில், 5 கட்டமாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது மொத்தமுள்ள 851 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் ஆளும் பிஜூ ஜனதா தளம் மட்டும் 786 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 42 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களில் மட்டுமே வென்றன. நகராட்சி பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 109 இடங்களில் ஆளும் கட்சி யான பிஜூ ஜனதா தளம் 95 இடங்
களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு 6 இடங்களும், காங்கிரசுக்கு 4 இட ங்களும் மட்டுமே கிடைத்துள்ளன. சுயேட் சைகள் 3 இடங்களைக் கைப்பற்றி யுள்ளனர்.
No comments:
Post a Comment