கோவை மாவட்ட திராவிடர் கழக தலைவரின் தந்தையார் மறைவு கழகத் தலைவரின் இரங்கலும் ஆறுதலும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 28, 2022

கோவை மாவட்ட திராவிடர் கழக தலைவரின் தந்தையார் மறைவு கழகத் தலைவரின் இரங்கலும் ஆறுதலும்

கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், சீரிய செயல் வீரருமான அருமைத் தோழர் ம.சந்திரசேகர் அவர்களது தந் தையார் திரு. க.மருதாசலம் (வயது 96) அவர்கள் நேற்று (27.3.2022) வயது மூப்பின் காரணமாக இயற் கையெய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

வயது மூப்பின் காரணமாக சில மாத காலமாக உடல் நலிவுற்றிருந்த அவர்களை - அவர் மகன் சந்திரசேகர், அவரது வாழ்விணையர் திலகமணி, பேரப்பிள்ளைகள் யாழினி, கார்முகிலி ஆகியோரும் நன்கு கவனித்து வந்தனர்.

மறைந்த பெரியவர் மருதாசலத்திற்கு, ம.சுப்ரமணியன், ம.மனோகரன், ம.சந்திரசேகர் என்ற மூன்று மகன்களும், சரோஜினி, ராஜேஸ்வரி, பூங்கொடி என்ற 3 மகள்களும் உள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் எந்த மூடச்சடங்குகளு மின்றி அவரது உடலுக்கு இறுதி நிகழ்வு நடைபெற்றது.

அவரை இழந்து வாடும் அவரது செல்வன் ம.சந்திரசேகருக்கு தொலைபேசியில் அழைத்து ஆறுதலும், மறைந்தவருக்கு இரங்கலும் தெரிவித்தோம்.


கிவீரமணி
தலைவர், 
திராவிடர் கழகம் 

சென்னை

28.3.2022


No comments:

Post a Comment