ரஷ்ய படைகளால் செர்னோபில் அணுமின் நிலையத்துக்கு ஆபத்து அய்ரோப்பிய நாடுகள் வரை கதிர்வீச்சு பரவும்: உக்ரைன் எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 29, 2022

ரஷ்ய படைகளால் செர்னோபில் அணுமின் நிலையத்துக்கு ஆபத்து அய்ரோப்பிய நாடுகள் வரை கதிர்வீச்சு பரவும்: உக்ரைன் எச்சரிக்கை!

கீவ், மார்ச் 29- உலகின் மிக மோசமான அணுஉலை விபத்து நடைபெற்ற செர் னோபில் அணுசக்தி நிலையம் அமைந்துள்ள பகுதியை ரஷ்யப் படை கள் ஆக்கிரமித்துள்ளன. 

பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப் பட்ட அணுசக்தி நிலை யத்தை சுற்றியுள்ள பகு திகளில், ரஷ்யப் படைக ளால் ஆக்கிரமிக்கப்பட்ட செர்னோபில் மின் நிலை யத்தைச் சுற்றி, ரஷ்யா "பொறுப்பற்ற" செயல்க ளில் ஈடுபட்டதாக உக் ரேனிய மூத்த அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டி னார். இதன்காரணமாக, உக்ரைனில் மட்டுமல்லா மல், மற்ற அய்ரோப்பிய நாடுகளிலும் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது என்று உக்ரைன் துணை பிரதமர் எச்சரித் தார். 

இதுகுறித்து உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தனது சமூக வலைதளமான டெலி கிராம் பதிவு வழியாக கூறியிருப்பதாவது,

“ரஷ்யப் படைகள் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள விலக்கு மண் டலத்தை இராணுவ மய மாக்குகின்றன.ரஷ்யப் படைகள் பழைய மற்றும் மோசமாகப் பராமரிக்கப் பட்ட ஆயுதங்களை பெரிய அளவில் அங்கு கொண்டு சென்றன. 

இதன்மூலம், அணுமின் நிலையத்தின் சிதைந்த நான்காவது அணுஉலையைச் சுற்றி கட்டப்பட்ட கட்டுமா னத்தை சேதப்படுத்தும் அபாயத்தை ரஷ்யப் படைகள் உருவாக்கு கின்றன.

இந்த மண்டலத்தில் போரால் ஏற்பட்ட தீயை உக்ரைன் தீயணைப்பு வீரர் கள்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை ரஷ் யப் படைகள் தடுத்தன.

ரஷ்யப் படைவீரர்க ளின் பொறுப்பற்ற மற் றும் தொழில்சார்ந்த நட வடிக்கைகள் உக்ரைனுக்கு மட்டுமல்ல, கோடிக்க ணக்கான  அய்ரோப்பியர் களுக்கும் மிகவும் கடுமை யான அச்சுறுத்தலாக உள்ளது. 

எனவே செர்னோபில் நிலையத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை களை அய்.நா. பாதுகாப்பு கவுன்சில் மேற்கொள்ள வேண்டும் என்றும், இனி மேலும் ரஷ்யாவால் அணுமின் நிலையத்துக்கு வரும் ஆபத்தை தடுக்க ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.

அணுஉலையை சேதப்படுத்துவதால் உக் ரைனில் மட்டுமல்ல, மற்ற அய்ரோப்பிய நாடு களிலும், வளிமண்டலத் தில் கணிசமான அளவு கதிரியக்க தூசியை வெளியிட வழிவகுக்கும்.

ஆனால், ரஷ்யா இதன் பெரும் ஆபத்தை உணராமல், அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் தொடர்ந்து ஆயுதங்க ளைக் கொண்டு செல்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மறுமுனையில், உக்ரைனுக்குள் இருக்கும் தங்கள் நாட்டு படைகள், அங்குள்ள அணு

சக்தி நிலையங்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன என்பதை ரஷ்யா மறுத் துள்ளது.

1986 இல் செர்னோபி லின் நான்காவது அணு உலையில் ஏற்பட்ட விபத் தால், அணுக்கதிர்வீச்சு பிரிட்டன் மற்றும் ஸ்பெ யின் வரை பரவி பேரழிவை உண்டாக்கியது அந்த விபத்தின் பின்விளைவு கள் மற்றும் அதனால் வெளியான கதிர்வீச்சி னால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட் டது.

அதனை தொடர்ந்து, செர்னோபிலில் அனைத்து அணுஉலைகளும் தற் போது சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

மீண்டும் அதை போன்ற ஒரு பேரழிவில் அய்ரோப்பிய நாடுகளை சிக்க வைக்க ரஷ்யா இறங் கியுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டுகிறது.

இதற்கிடையே, செர் னோபில் நிலைமையை உன்னிப்பாகக் கண்கா ணித்து வருவதாக பன் னாட்டு அணுசக்தி முகமை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment