மக்களிடம் செல், மக்களோடு பணியாற்று, மக்களோடு மக்களாக இருந்து அண்ணா கற்றுத் தந்ததை உணர்ந்து கடமையாற்ற கலைஞர் சிலையைத் திறந்து வைத்த நேரத்தில் உறுதி ஏற்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

மக்களிடம் செல், மக்களோடு பணியாற்று, மக்களோடு மக்களாக இருந்து அண்ணா கற்றுத் தந்ததை உணர்ந்து கடமையாற்ற கலைஞர் சிலையைத் திறந்து வைத்த நேரத்தில் உறுதி ஏற்போம்!

 முதலமைச்சர் மு..ஸ்டாலின்

தூத்துக்குடி,மார்ச்7- தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பாக வடக்கு மாவட்ட திமுக சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் 10 அடி உய ரத்தில் மேனாள் முதலமைச்சர் கலைஞரின் முழு உருவச் சிலையை தமிழ்நாடு முதல மைச்சர் மு..ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அப்போது அவர் ஆற்றிய உரையில் ,

சாதாரண வெற்றி அல்ல; இதுவரை கழகம் கண்டிராத வெற்றி!

உள்ளாட்சிப் பொறுப்புக்கு தேர்தல் நடந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு மிகப்பெரிய  வெற்றியை பெற்றோம். இது சாதாரண வெற்றி அல்ல, இதுவரை கழகம் கண்டிராத வெற்றி.

கலைஞர் சிலையை திறந்து வைத்து இருக்கிறோம் என்றால், அவரது வழி நின்று, அவர் எந்த உணர்வோடு பாடுபட்டாரோ, பணியாற்றினாரோ, எதையெல்லாம் கற்றுத் தந்து உள்ளாரோ, அதையெல்லாம் நாங்கள் நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றுவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி யாகத்தான் இதனை கருதிக் கொண்டு இருக் கிறேன்.

பல பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டு இருக்கக்கூடிய உள்ளாட்சியில் மேயர்களாக, துணை மேயர்களாக, மாநகராட்சி உறுப்பினர் களாக, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்களாக, உறுப்பினர்களாக, ஊரகப் பகுதியில் உள்ள உள்ளாட்சிப் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, அமைச்சராக இருக்கும் நாங்களாக இருந் தாலும் சரி, முதலமைச்சராக இருக்கும் நானாக இருந்தாலும், இன்று எடுத்துக் கொள்ளும் உறுதி மொழி என்னவென்றால், அறிஞர் அண்ணா அடிக்கடி எடுத்து சொல் வது உண்டு. மக்களிடம் செல், மக்களோடு பணியாற்று, மக்களோடு மக்களாக இருந்து வாழ் என்று கற்றுத் தந்து உள்ளார். அதனை உணர்ந்து நாம் கடமையாற்ற, கலைஞரின் உருவச்சிலையை திறந்து வைத்து உள்ள இந்த நேரத்தில் நாம் அத்தனை பேரும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உறுதியோடு கூறுகிறேன், எங்காவது ஒரு சிறு தவறு நடந்தாலும் தொடர்ந்து கண் காணித்துக் கொண்டு இருப்பேன். கண் காணிப்பது மட்டுமல்ல, உரிய நடவடிக்கை உடனடியாக எடுப்பேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். மிரட்டுவதற்காக அல்ல, அச்சுறுத்துவதற்காக அல்ல, மக்கள் நம்மை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்கள்.

கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும்

அவர்களின் நம்பிக்கையை நாம் காப் பாற்ற வேண்டும் அதற்காகத்தான். நம்மு டைய கூட்டணியில் இடம் பெற்று உள்ள கட்சிகளுக்கு சில இடங்களை ஒதுக்கி ஒப் படைத்தோம். அங்கு சில இடங்களில் தவறுகள் நடந்தது. அந்த தவறு நடந்த காரணத்தால் நான் வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், கூனிக் குறுகி நிற்கி றேன். ஆகையால் அந்த தவறை செய்தவர் கள் உடனடியாக திருந்த வேண்டும். பதவி விலகி வர வேண்டும். இல்லையென்றால் கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறினேன்.

300 பேருக்கு பொற்கிழி

இது செய்திக்காகவோ, கூட்டணிக் கட்சியினரை திருப்திப் படுத்துவதற்காகவோ அல்ல. தவறு செய்தவர்களை மிரட்டுவ தற்காக அல்ல. நிச்சயமாக, உறுதியாக அவர் கள் செய்த தவறை உணர்ந்து திருந்த வில்லையென்றால் உரிய நடவடிக்கையை நான் எடுப்பேன் என்பதை தலைவர் கலைஞர் சிலையை திறந்து வைத்துள்ள இந்த நேரத்தில் நான் உறுதி எடுத்துக்கொண்டு இருக்கிறேன். அந்த உணர்வோடுதான் தலைவர் கலைஞர் சிலையை திறந்து வைத்து இருக்கிறோம். - இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கலைஞர் அரங்கம் முன்பாக திமுக கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் மூத்த திமுக பிரமுகர்கள் 300 பேருக்கு பொற்கிழி வழங்கினார்.

விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள்

பி.கீதாஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந் திரன், ராஜகண்ணப்பன், அனிதா ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment