மாஸ்கோ, மார்ச் 7- உக்ரைன் நாட்டின் மீது ரசியா போர் தொடுத்து 11 நாட் கள் ஆகிவிட்டன. இந்த 11 நாளில் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு, வான் தாக்குதல், பீரங்கி தாக்கு தல் என நடத்தி உருக்கு லைய வைத்து வருகிறது ரசியா. அதே நேரம் உக் ரைனும் ஈடுகொடுத்து போராடி வருகிறது.
இந்நிலையில், ரசியா வில் வரவிருக்கும் நாட் களில் விசா கார்டு பரி வர்த்தனைகள் துண்டிக் கப்படும் என விசா கூறி யது. விசா கார்டுகள் தடை செய்யப்பட்டவு டன் ரசியாவில் வழங்கப் பட்ட கார்டுகள் வெளி நாட்டில் வேலை செய் யாது. வெளிநாட்டில் வழங்கப்பட்ட கார்டுகள் ரசியாவிற்குள் வேலை செய்யாது என அறிவித் துள்ளது.
இதேபோல், உக்ரைன் மீதான ரசிய போர் அதிர்ச்சியூட்டும் மற்றும் பேரழிவு தரக்கூடியது எனக்கூறிய மாஸ்டர் கார்டு, விசாவைப் போலவே மாஸ்டர்கார்டு தடையும் இருக்கும் என அறிவித்தது.
ரசிய வங்கிகளால் வழங்கப்படும் கார்டுகள் இனி மாஸ்டர்கார்டு நெட் வொர்க்கால் ஆதரிக்கப் படாது. நாட்டிற்கு வெளியே வழங்கப்படும் எந்த மாஸ்டர்கார்டும் ரசிய வணிகர்கள் அல்லது ஏ.டி.எம்.களில் வேலை செய்யாது என தெரிவித் துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த விசா மற்றும் மாஸ்டர்கார்டு நிறுவ னங்கள் ரசியாவில் தங் களது செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது அதன் வாடிக் கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத் துள்ளது.
No comments:
Post a Comment