தமிழ்நாடு காவல்துறையினருக்கு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு அறிவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

தமிழ்நாடு காவல்துறையினருக்கு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு அறிவுரை

 சென்னை, மார்ச் 6 காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தமிழ்நாடு காவல்துறையினருக்கு 7 அறிவுரைகளை தீவிரமாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக, எவ்வித அசாம்பாவித சம்பவங்கள் இன்றி முடிந்துள்ளது. இதற்காக தமிழ்நாடு காவல்துறையினருக்கு பாராட்டுகள்.

அடுத்து காவல்துறையினர் தீவிரமாக செயல்படுத்த வேண்டிய கீழ்கண்ட பணிகள் உள்ளது.

1.வன்முறையாளர்கள், கூலிப்படையினர், கொலை குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் விரைந்து முடித்து, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்து சிறையில் அடைக்க வேண்டும்.

2.கண்டுபிடிக்கப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட வேண்டும்.

3.தொடர்ந்து தவறு செய்யும் ரவுடிகளை மாவட்ட வருவாய் அதிகாரிகள் முன் ஆஜர்படுத்தி, நல்லொழுக்க பத்திரம் பெற வேண்டும். மீறுபவர்கள் ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்

4.குழந்தைகளுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள் அன்றாடம் கண்காணிக்கப்பட வேண்டும். அவர்கள் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தடுக்கப்பட வேண்டும்.

5.அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

6.வாகன விபத்துகளை குறைக்க செயல்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

7.குற்றவாளிகளின் ஒளிப்படங்கள், காணொலிகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இவர்களை பிற்காலங்களில் அடையாளம் காண இது உதவியாக இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமத்துவத்தின் மகிழ்ச்சி’ மகளிர் தினத்தையொட்டி விழிப்புணர்வு பிரச்சார திட்டம்

சென்னை, மார்ச் 6- பன்னாட்டு மகளிர்தினத்தை யொட்டி, புதுமையானஉலகளாவிய அலைபேசி பிராண்டாக திகழும்விவோ நிறுவனம், சமூகத்தில் நிலவும்பாலினநிலைப்பாடுகளைஎடுத்துக் காட்டும் "சமத்துவத்தின் மகிழ்ச்சி" என்னு புதிய டிஜிட்டல் பிரச்சார ஒலி, ஒளி நாடாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிராண்ட் தனதுபார்வையாளர்களை சுய பரிசோதனை செய்ய தூண்டுவதையும், சார்புகளை உடைக்க சரியான நடவடிக்கைகளை எடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் இயக்குநர் யோகேந்திர சிறீராமுலா கூறுகையில், எங்கள் பிராண்ட்டின் நோக்கம், 'மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்குவது' என்பதாகும்.இது சமத்துவத்தின் மகிழ்ச்சி இல்லாமல் முழுமையடையாது. இதன் மூலம் நிஜவாழ்க்கையில் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பாலின சார்புகளை வெளிப்படுத்துவதைநோக்கமாகக்கொண்டுள்ளோம். இந்த பிரச்சார படத்தின் முக்கிய நோக்கமே ஒவ் வொரு பெண்ணும் தான் விரும்பியவாறு, அலட்சியப் படுத்தப்படாமல் சுதந்திரமாக இந்த சமூகத்தில் வாழ்வதற்கான சிந்தனையை விதைக்கும் முயற்சியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் மாவட்ட ஆட்சியர்

தருமபுரி, மார்ச் 6  தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவ, மாணவியரை ஊக்கப் படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் புதிய முயற்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.

தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவியரை சிறு, சிறு குழுக்களாக பிரித்து, சீரான இடைவெளியில் ஒவ்வொரு குழுவினரையும் மாவட்ட ஆட்சியர் தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாடி அவர்களின் திறனையும், உத்வேகத்தையும் அதிகரிப்பது இந்த முயற்சியின் நோக்கமாகும். அதன்படி, முதல்கட்டமாக தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி களைச் சேர்ந்த 14 மாணவ, மாணவியருடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி 1 மணி நேரத்துக்கும் மேலாக கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது ஆட்சியர் பேசியது: நமது பெற்றோரில் பலரும் பள்ளிக் கல்வி வரை மட்டுமே படித்தவர்களாக உள்ளனர். ஆனால், படிப்பின் மூலம் தங்கள் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றே அவர்கள் அனைவரும் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பம் நிறைவேற, ஒவ்வொரு மாணவ, மாணவியரும் படிப்பில் உண்மையாகவும், முழுமையாகவும் இருக்க வேண்டும். பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாணவ, மாணவியர் கற்றலில் ஆர்வம் காட்ட வேண்டும்.

அதேநேரம், மதிப்பெண் மட்டுமே மிக முக்கியமல்ல. மாணவ, மாணவியர் பெரிய இலக்கு ஒன்றை நிர்ணயித்துக் கொண்டு செயலாற்ற வேண்டும். ஆனாலும், மதிப்பெண் குறைந்து விட்டாலோ, சிறு தோல்வி ஏற்பட்டு விட்டாலோ அதற்காகவெல்லாம் துவண்டு போவது, விபரீத முடிவுகளை தேடுவதெல்லாம் கூடாது. ஒரு சறுக்கல் அல்லது தோல்வி ஏற்பட்டால் அடுத்த முறை வெற்றி பெற்றே தீருவது என்ற நோக்கத்துடன் மிகத் தீவிரமான உழைப்பை கொட்ட வேண்டும். இலக்கை அடைய எத்தனை முறை வேண்டுமானாலும் முயன்று கொண்டே இருக்கலாம்.

அய்ஏஎஸ் தேர்வில் முதல் முறை நான் வெற்றிபெற முடியாததால் தான் அடுத்த முறை அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டேன். சென்னை கன்னிமாரா நூலகத்தை அதிகபட்சமாக பயன்படுத்தத் தொடங்கினேன். அதன் பலனாக, முதல் ரேங்க்-இல் வெற்றி பெற்று சொந்த மாநிலத்தில் அதிகாரியாக முடிந்தது.

படிக்கும் காலத்திலும், பணிக்குச் சென்ற பிறகும் நேர்மையை மட்டும் எந்த சூழலிலும் தவறாமல் கடைப்பிடியுங்கள். பாடங்கள் உட்பட எதையும் மனப்பாடம் செய்ய வேண்டாம். புரிந்து படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் பாடங்கள் அனைத்தும் பிடித்தமானதாக மாறும். அரசுப் பள்ளி, தனியார் பள்ளி ஆகிய இரண்டிலும் படிப்பின் தரம் வேறுபட்டதாக இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க அரசு விரும்புகிறது. அந்த நிலை விரைவில் வரும். இவ்வாறு பேசினார்.

No comments:

Post a Comment