மக்கள் சிந்தனைக்கு...
'நீட்' தொடர்பான தமிழ்நாடு அரசின் உயர்நிலை குழுவுக்கு
திராவிடர் கழகத்தின் சார்பில் 21.6.2021 அன்று அளிக்கப்பட்ட கருத்துரு
1. நுழைவுத் தேர்வினால் யாருக்கு பாதிப்பு?
1984ஆம் ஆண்டில் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதனை அப்போதே திராவிடர் கழகம் அந்த ஆணையை எதிர்த்தது.
இது கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கிறது இந்த நுழைவுத் தேர்வு. நகர்ப் புற பள்ளிகள் மற்றும் கிராமப்புற பள்ளிகளின் தரமும், கட்டமைப்பும் சமமாக இல்லாத நிலையில், அனைவருக்கும் பொதுவான நுழைவுத்தேர்வு என்பது எப்படிச் சரியாகும்? நியாயமாகும்? பெருநகரங்களில், நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகள், அவற்றில் உள்ள வசதிகள், கிராமப்புறப்பள்ளிகளில் உண்டா? அங்கு போதிய ஆசிரியர்கள், கரும்பலகைக் கூட இல்லாத நிலை உண்டே இந்த ஏற்றத் தாழ்வைச் சமன்படுத்த ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் முயற்சிகள் என்ன? சமநிலை உருவாக்கிய பின் அல்லவா பொது நுழைவுத் தேர்வை பற்றிச் சிந்திக்க வேண்டும். மக்களில் வருணபேதம் உள்ளதுபோல் நகர, கிராம பேதங்களும் உண்டு. கிராமம் என்றால் அதற்குப் பட்டிக்காடு என்று பெயர் கொடுத்துள்ளனர். அங்கு சாலை இல்லை, விளக்கு வெளிச்சம் இல்லை, மருத்துவமனை இல்லை, நூலகம் இல்லை என்று எதுவும் இல்லை போன்ற அவலநிலை தானே உள்ளது. நகரம் என்பது இதற்கு நேர்மாறானதாக அல்லவா இருக்கிறது. இவற்றைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் தானே அது மக்கள் நல அரசாக இருக்க முடியும்?
கிராமப்புற மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதுவதில் பல இடர்ப்பாடுகள் உள்ளன. நகர்ப்புறங்களில் தெருவிற்கு தெரு பயிற்சி மய்யங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் இது கிடையாது. பள்ளிகளில் ஆய்வகங்கள், நூலகங்கள் கூட இல்லை. அவர்கள் தங்கள் பள்ளித் தேர்வை முடித்து விட்டு வந்துதான் நகரத்தில் மிகக் குறுகிய நாட்கள் தங்கிப் படித்துப்பயிற்சிபெறவேண்டும். பெரும் பொருளாதார வசதி வாய்ப்புள்ளவர்களுக்குத்தான் இது சாத்தியம். ஏழை மாணவர்களின் நிலை என்னாவது? அவர்களின் மருத்துவர் கனவில் மண்விழுமே!
ஆனால், நகர்ப்புற மாணவர்களுக்கு அப்படியில்லை அவர்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆண்டு முழுவதும் அதற்கான பயிற்சிகளை பகுதி நேரமாகப் பெறமுடியும். இவர்கள் இருவரையும் ஒரே களத்தில் நிறுத்துவது எப்படி நியாயமானதாகும்?
இதைக்குறிப்பிட்டுத் தான் 2004-2005 ஆம் கல்வி ஆண்டின் புள்ளிவிவரத்தைக் கொடுத்து திமுக அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது.
அந்த விவரம்:
2004-2005 ஆம் ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் - 5,00,000 பேர்
இதில் கிராமப்புற மாணவர்கள் மொத்தம் - 2,10,000 பேர்
மொத்தம் இருந்த மருத்துவ இடங்கள் - 1,125 இடங்கள்
இதில் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைத்த இடங்கள் நுழைவுத் தேர்வுக்காரணமாக - 221 மட்டுமே.
இதனை ஏற்றுத்தான் சென்னை உயர்நீதி மன்றம் நுழைவுத் தேர்வு ரத்தை உறுதிப்படுத்தியது. அப்பொழுது நுழைவுத் தேர்வு, இப்பொழுது "நீட் தேர்வு
2. பாடத்திட்டம் ஒன்றில்லை;
ஆனால் நுழைவுத் தேர்வு ஒன்றா!
இந்தியாவில் பல்வேறு கல்வித் திட்ட முறைகள் நடைமுறையில் உள்ளன. மாநில பாடத்திட்டங்கள், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்திய முறை என்று பல்வேறு பாடத் திட்டங்கள் உள்ளன. இந்த நிலையில், அனைவருக்கும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு என்பது எப்படி சரியானதாகவும் நேர்மையானதாகவும் இருக்க முடியும்!
நுழைவுத் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் அமைந்திருப்பதால், அத்தகைய கல்வித் திட்டத்தில் படித்தவர்கள் தானே அதிகப் பலன் பெறுவார்கள், மற்றவர் நிலை என்ன? கிராமப் புற மாணவர்களின் நிலை என்ன? சிந்திக்க வேண்டாமா?
3. எந்த மொழியில் நுழைவுத் தேர்வு?
பல்வேறு மொழிகளை பயிற்று மொழிகளாகக் கொண்ட இந்தியக் கல்வி முறைகளில் எந்த மொழியில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்? இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடந்தாலும் இது இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் பயிற்று மொழியான ஆங்கிலத்தில் எழுதும் போது ஒரு (இந்தி) மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் சொந்தத் தாய் மொழியில் எழுத வாய்ப்பளிப்பது ஒரு சலுகை அல்லவா?
தமிழில் எழுதலாம் என்று காலம் தாழ்ந்த அறிவிப்பு ஒன்று இருந்தாலும், அதனால் தமிழர்களுக்குப் பயன் என்ன?
தமிழில் அதற்கான நூல்கள் இல்லாத நிலையில் வினாத்தாள் மட்டும் தாய்மொழியில் இருப்பதால் ஏற்படும் நன்மை என்ன?
இது ஒரு ஏமாற்று வேலை அல்லவா?
4. நுழைவுத் தேர்வுதான் தகுதிக்கு அளவுகோலா?
சமமற்ற கல்வி பயிலும் நிலையில், நுழைவுத் தேர்வு நடத்தினால் நியாயமான போட்டி ஏற்படாது. அதுமட்டுமன்றி, நுழைவுத்தேர்வு-தகுதிக்கான அளவுகோல் அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத் குமார் ஆகியோர் கருத்து முக்கியமானது.
அவர்கள் 27.04.2007 அன்று வழங்கிய தங்கள் தீர்ப்பில் நுழைவுத் தேர்வில் சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட ‘கோன் பனேகா குரோர்பதி' தொலைக்காட்சி நிகழ்ச்சி போல அனுமானத்தின் அடிப்படையில் விடையை டிக் செய்யும் வாய்ப்புள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படும் +2 மாணவர்கள் 200க்கு 190க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண்களை பெற்றுத் தானே சேர்க்கப்படுகிறார்கள். இந்த தகுதி போதாதா?
நுழைவுத் தேர்வு இல்லாவிட்டால் தகுதியற்றவர்கள் மருத்துவராகி விடுகிறார்கள் என்னும் மூடக் கருத்தினை பலர் கூறுகின்றனர். இது மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வுதானே தவிர, மருத்துவர் பணிக்கான தேர்வு அல்ல.
டில்லி பல்கலைக் கழகத்திலும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோரின் கருத்து முக்கியமானது.
அந்நாள்களில் தேர்ச்சி பெற குறைந்த மதிப்பெண் 35. டாக்டர் அம்பேத்கர் 37 மதிப்பெண் பெற்றிருந்தார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தால் உங்களுக்கு ஓர் அம்பேத்கரும், அருமையான அரசமைப்புச் சட்டமும் கிடைத்திருக்குமா? என்பது அவர்களின் கேள்வி
(தொடரும்)
5. நுழைவுத் தேர்வில் தவறே நடக்காதா?
நுழைவுத் தேர்வில் தவறே நடக்க இடம் இல்லை என்பதும் உண்மைக்கு மாறானது.
மருத்துவ முதுநிலைப் பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 45 டாக்டர்கள் உள்பட 52 பேர் மீது சி.பி.அய். வழக்கு தொடர்ந்ததா? இல்லையா?
இது குறித்து 21.3.2007 தேதியிட்ட 'தினமணி' நாளிதழ் தரும் செய்தி:
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், 45 மருத்துவர்கள் உட்பட 52 பேருக்கு குற்றப் பத்திரிகையின் நகல்களை சென்னை சி.பி.அய். சிறப்பு நீதிமன்றம் வழங்கியது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு நடந்தது. தமிழ்நாட்டிலிருந்து நான்காயிரத்து 188 பேர் தேர்வு எழுதினர். நுழைவுத் தேர்வின் போது முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
கேள்வித் தாளை பென் ஸ்கேனர் மூலம் அனுப்பி எஸ்.எம்.எஸ். மூலம் விடைகளைப் பெற்றது விசாரணையில் தெரியவந்தது.
இச்சம்பவத்தில் மருத்துவர் பிரதீப் குமார் உள்ளிட்ட 45 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 52 பேர் மீது சென்னை சி.பி.அய், சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு சி.பி.அய் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேலு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகல்கள் வழங்கப்பட்டன. ஏப்ரல் 10ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. (‘தினமணி' -21.3.2007)
இதிலிருந்து என்ன தெரிகிறது? தகுதி திறமையை நுழைவுத் தேர்வு சரியாக நிலை நிறுத்தும் என்று நம்புவது தப்பு என்பதல்லவா?
6. நீட் நுழைவுத்தேர்வு அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்குமான பொதுத் தேர்வு. ஒன்றிய அரசின் மருத்துவக் கல்லூரிகளிலும் இதன் மூலம் ஒற்றைத் தேர்வில் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டே, அதை ஏன் எதிர்க்க வேண்டும்?
இதில் முழு உண்மை இல்லை.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, சண்டிகரில் உள்ள பி.ஜி.அய். மற்றும் இராணுவக் கல்லூரிகள் போன்ற கல்லூரிகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு பொருந்தாது. அப்படியென்றால், நீட் என்பது தகுதி குறைந்த நுழைவுத் தேர்வா? எல்லோருக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வு என்று பசப்புவோர் ஏன் மேற்கண்ட சில கல்லூரிகளுக்கு மட்டும் தனியாக நுழைவுத் தேர்வு வைக்கின்றனர். ஏனெனில், அனைவருக்கும் பொது என்பதில் நீட் ஆதரவாளர்களுக்கு உடன்பாடில்லை. ஆக, பொதுவான நுழைவுத் தேர்வு என்பது ஏமாற்று வித்தையே!
7. நீட் உண்மையில் தகுதியானவர்களுக்கு மட்டும் வாய்ப்பை உருவாக்குமா? நன்றாகப் படிக்கக் கூடிய மாணவனை விட, பணம் இருப்பவர் கல்வி பெறலாம் என்ற நிலையை மாற்றுமா?
நீட் (ழிணீtவீஷீஸீணீறீ ணிறீவீரீவீதீவீறீவீtஹ் நீuனீ ணிஸீtக்ஷீணீஸீநீமீ ஜிமீst) என்பது நுழைவுத் தேர்வு மட்டுமல்ல, தகுதித் தேர்வும் ஆகும். இன்னும் சரியாகச் சொன்னால், இது போட்டித் தேர்வல்ல, தகுதித் தேர்வு. அதாவது இந்திய அளவில் 10000 மருத்துவக் கல்வி இடங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீட் தேர்வில் முதல் 10000 இடங்களைப் பெற்றவர்களுக்குத் தான் சீட் என்றால் அது போட்டித் தேர்வு. ஆனால், நீட் தேர்வில் 50% மார்க் எடுத்தால் நீங்கள் தகுதி பெறுகிறீர்கள். அதை வைத்துக் கொண்டு நீங்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கிக் கொள்ளலாம் என்றால் என்ன பொருள்? தனியார் கல்லூரிகளில் 'சீட்' வியாபாரம் நடக்க வசதி செய்து தரப்படுகிறது என்று பொருள். அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடும் 96 மதிப்பெண்களோடு முடிந்துவிட்டால், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் நீட் நுழைவுத் தேர்வில் 95 மதிப்பெண் பெற்ற மாணவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, 50% மதிப்பெண் பெற்ற மாணவன் தனியார் கல்லூரியில் பணம் கொடுத்து இடம் வாங்குவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்தவே தகுதி (ணிறீவீரீவீதீவீறீவீtஹ்) என்ற சொல்லைச் சேர்த்திருக்கிறார்களே தவிர, அவர்கள் சொல்லும் உயர் மதிப்பெண் பெற்று தகுதியுடையோருக்கு மட்டுமே மருத்துவக் கல்வி என்பதற்காக அல்ல.
8. மாநில உரிமையைப் பறிக்கலாமா?
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு என்பதே அறவே இல்லாதபோது, அதற்கான ஒரு தனிச் சட்டமும், நீதிமன்றத் தீர்ப்பும் இருக்கும்போது ஒன்றிய அரசு மாநில உரிமையில் அத்துமீறி நுழையலாமா? இது மாநில உரிமையில் தலையிடும் ஆதிக்க எண்ணமும், அக்கிரமமும் என்பதோடு மாநில சுயாட்சிக்கும், உரிமைக்கும் எதிரானது அல்லவா?
நெருக்கடி நிலை காலத்தில் 1976 இல் கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்ற அபகரிப்பால், இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றுதானே மாநில அரசுகள் கருத முடியும். மறுபடியும் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு செல்வதுதானே ஒரே தீர்வு!
(தொடரும்)
9. 'நீட்'டால் ஏற்படும் - ஏற்பட்ட இழப்
No comments:
Post a Comment