24-ஆம் தேதி சிறப்பு கிராமசபைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 18, 2022

24-ஆம் தேதி சிறப்பு கிராமசபைக் கூட்டம்

 சென்னை, ஏப்.18 12,524 பஞ்சாயத்துக்களிலும் வரும் 24-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடத்துவது   தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் பிரவீன் பி.நாயர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பஞ்சாயத்துராஜ் தினம்

தேசிய அளவில் பஞ்சாயத்துராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 24-ஆம் தேதி கிராமங்கள் நீடித்த வளர்ச்சி குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டஙகள் நடத்துமாறு ஒன்றிய பஞ்சாயத்துராஜ் அமைச்சக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கவும், உறுதி மொழி எடுத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த கிராமசபை கூட்டம் நடத்தப் பட்டதற்கான விவரங்களை ஒன்றிய அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது. மேலும் கிராமசபைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக ஏற்கெனவே வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை 24-ஆம் தேதி நல்ல முறையில் நடைபெற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கூட்டம் நடைபெற்றமைக்கான அறிக்கையினை தொடர்புடைய கிராம ஊராட்சிகளிடமிருந்து பெற்று இவ்வியக் கத்திற்கு 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப் படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல் சென்னை  அரசு மருத்துவ கல்லூரிக்கு 60-ஆவது இடம்!

சென்னை, ஏப்.18   உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி

60-ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலை வணிக இதழான சிஇஓ வேர்ல்டு இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவின் ஹார்டுவேர் மருத்துவக் கல்லூரி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2-ஆவது இடத்தை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி பிடித்துள்ளது.இந்த 5 மருத்துவ கல்லூரி களில் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் ஒரே மருத்துவக் கல்லூரி சென்னை மருத்துவக் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment