அரசின் அலட்சியத்தால் 40 லட்சம் பேர் கரோனா காலத்தில் உயிரிழப்பு மோடி உண்மையை பேசுவதில்லை : ராகுல் காந்தி சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 18, 2022

அரசின் அலட்சியத்தால் 40 லட்சம் பேர் கரோனா காலத்தில் உயிரிழப்பு மோடி உண்மையை பேசுவதில்லை : ராகுல் காந்தி சாடல்

புதுடில்லி,ஏப்.18- ‘உலகளாவிய கரோனா இறப்பு எண்ணிக்கையைப் பகிரங்கப்படுத்தும் உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துகிறதுஎன்று நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. அதனை சுட்டிக்காட்டிகாங்கிரசு கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் பதிவில்  பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கரோனா இறப்பு எண்ணிக்கையை கணக்கிட, உலக சுகாதார அமைப்பு கையாண்டுள்ள கணித முறையை, இந் தியா கடுமையாக எதிர்த்து வருகிறது.

உலகளாவிய கரோனா இறப்பு எண்ணிக்கையைப் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தும், உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துகிறதுஎன்ற செய்தியை சுட்டிக்காட்டி அதற்கு பதிலளித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளி யிட்டு இருக்கும் பதிவில், “இந்தியா போன்றதொரு பரந்து விரிந்த தேசத்தில், அதன் எண்ணிலடங்கா மக்கள் தொகைக்கும் இந்த முறை பொருந்தாதுஎன்று தெரிவித்திருந்தது.

ஒன்றிய சுகாதார அமைச்சக தரவு களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நான்கு பேர் கரோனாவால் இறந்த நிலையில், நாட்டில் மொத்த கரோனா  இறப்பு எண்ணிக்கை 5,21,751 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. ஒருபுறம், 5 லட்சம் பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக ஒன்றிய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. மறுபுறம், இறந்தவர்களின் எண்ணிக்கை 40 லட்ச மாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இது குறித்து ராகுல் காந்தி பதிவிட்டுள்ள சுட்டுரைப் பதிவில்:-

மோடி உண்மையை பேசுவதில்லை, மற்றவர்களை பேச விடுவதில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று அவர் இன்னும் பொய் சொல்கிறார். கரோனா காலத்தில் Ôஅரசின் அலட்சியத்தால்' 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள் மோடி, இறந்தவர்களின் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.4 லட்சம்  இழப்பீடு வழங்க வேண்டும்என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

ஏப்ரல் 2021இல் கரோனாவால் அதிகமான எண்ணிக்கையில் உயிரி ழப்பைத் தொடர்ந்து உயிரிழந்தவர் களின் உடல்களை எரிக்கும் படத்தையும், நியூயார்க் டைம்ஸ் தகவலையும் சுட்டுரைப் பதிவில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

No comments:

Post a Comment