சென்னை, ஏப்.18 நீதித்துறையில் பெண் வழக்குரைஞர்கள் தேவை வரும் காலத் தில் அதிகரிக்கும் என சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி பேசினார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழ் நாட்டை சேர்ந்த எம்.எம்.சுந்தரேஷ் பதவியேற்றதைத் தொடர்ந்து, தமிழ் நாடு பெண் வழக்குரைஞர்கள் சங்கத் தின் சார்பில் சென்னையில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு தமிழ்நாடு பெண் வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் கே.சாந்தகுமாரி தலைமை தாங்கினார். துணை தலைவர் வேதவள்ளி குமார் வரவேற்று பேசி னார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கண்ணம்மாள், அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தின் தலைவர் நீதிபதி கே.என்.பாஷா, இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபா கரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உள்பட நீதிபதிகள், வழக்குரைஞர்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டு எம்.எம்.சுந்தரேசுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
தொடர்ந்து, உச்சநீதிமன்றநீதிபதி எம்.எம்.சுந்தரேசுக்கு நினைவு பரிசு களையும், சிறப்பு புத்தகங்களும் வழங்கி மரியாதை செய்தனர். இதைத் தொடர்ந்து, ஏற்புரை வழங்கிய நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:-
சமுதாய அமைப்பு, கட்டமைப்பு பற்றி தெரிந்து கொண்டால் தான் ஒருவர் நல்ல நீதிபதியாக வர முடியும். ஒரே சட்டத்தை பின்பற்றி சமுதாயத்தில் இருக்கின்ற பலருக்கு நீதி அளிப்பது என்பது சரியானது அல்ல. குற்றவியல் வழக்குகளை பார்க்கும் போது, நீதிபதி அதனை உயர்ந்த நிலையில் இருந்து பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கின்ற நீதிமன்ற கட்டமைப்பில் குற்ற வழக்குகளில் வழங்குகின்ற தீர்ப்பி னுடைய அணுகுமுறையை இந்தியாவில் வேறு எங்கும் நான் பார்த்தது இல்லை.
ஒரு ஏழை உச்சநீதிமன்றத்தில் நீதி கேட்கிறான் என்றால், அது அந்த ஏழை யின் தவறு அல்ல. நம்முடைய தவறு. இந்த கட்டமைப்பின் தவறு. மனிதன் ஆறறிவு கொண்டவனாக இருந்தால், மற்றவர்களிடம் கருணை காட்ட வேண் டும். பெண் இல்லாமல் இந்த உலகம் இல்லை. ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறாள் என்று சொல்வது தவறு. ஆணின் வெற்றிக்கு முன்னால் பெண் இருக்கிறாள் என்பது தான் சரி.
போராடுவது இயற்கையாகவே பெண்ணுக்கு இருக்கிறது. பெண்கள் நீதித்துறைக்கு அதிகளவில் வர வேண் டும். வரும் காலத்தில் பெண் வழக்குரை ஞர்கள் தேவை அதிகரிக்கும். வழக்கு களின் தன்மை தற்போது மாறிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில், தொழில்நுட்பம் சார்ந்த வழக்குகள்தான் அதிகளவில் வருகிறது.
அதேபோல், சிறு வழக்குகளும், சமுதாயத்தினுடைய மாற்றத்தை யொட்டிய வழக்குகளாக வரும் காலத் தில் மாறும். பெண்களுடைய பங்கு நீதித்துறையில் வருகின்ற காலத்தில் அதிகரிக்கும். இதுபோன்ற சங்கங்கள் இளம்பெண் வழக்குரைஞர்களை ஊக் குவிக்க வேண்டும். இந்த பாராட்டுகளை எல்லாம் என்னை ஊக்குவிப்பதாக எடுத்து கொள்கிறேன். என்னால் முடிந்த வரை தகுதியான பெண் வழக் குறைஞர்களுக்கு நீதிபதி பதவி கிடைக்க வழிவகை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment