டில்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய நிதியமைச்சருடன் சந்திப்பு தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ரூ.20,860 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

டில்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய நிதியமைச்சருடன் சந்திப்பு தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ரூ.20,860 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தல்

 தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ரூ.20,860 கோடி 
நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தல்

புதுடில்லி,ஏப்.2- தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டில்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனை சந்தித்தார். அப்போது தமிழ் நாட்டுக்கு அளிக்கப்பட வேண்டிய ரூ.20,860 கோடி நிலுவைத்தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனு ஒன்றையும் அவரிடம் கொடுத்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

2015-_2020 காலகட்டத்திற்கு, 14-ஆவது நிதிக்குழு, தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளுக்கு அடிப்படை மானி யமாக 7,899.69 கோடி ரூபாய் பரிந்து ரைத்தது. ஆனால், மொத்தமுள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில், 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ளாட் சித் தேர்தல்கள் நடைபெறாததால், 548.76 கோடி ரூபாய் அடிப்படை மானி யத்தை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. நீதிமன் றத்தில் வழக்குகள் இருந்ததால், இந்த 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் தேர் தல்கள் அப்போது நடத்த இயல வில்லை.

இந்த அரசு பொறுப்பேற்றப் பின்னர், 2900 கிராமப் பஞ்சாயத்து களில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர் தல்கள் நடத்தப்பட்டு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதைப்போன்று 14-ஆவது நிதிக்குழு 2016-_2017 முதல் 2019-_2020 வரையிலான காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக் கான செயல்பாட்டு மானியமாக தமிழ்நாட்டுக்கு 2,524.20 கோடி ரூபாய் பரிந்துரை செய்துள்ளது. அந்த மானி யத் தொகையில் பரிந்துரைக் காலத்தில் ஒன்றிய அரசு 2016-_2017 ஆம் ஆண்டுக் கான செயல்பாட்டு மானியமாக 494.09 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.

இந்நிலையில் அதற்கான பயன் பாட்டுச் சான்றிதழ் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு, 2017-_2018ஆம் ஆண்டுக் கான செயல்பாட்டு மானியத்தினை விடுவிக்க கோரிக்கை விடப்பட்டது.

மானியங்களைப் பெறுவதற்கான அனைத்து நிபந்தனைகளை நிறைவேற் றியபோதும், பயன்பாட்டுச் சான்றிதழை அனுப்பிய நிலையிலும், 2017-_2018-ஆம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியம் தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து 2018-_2019 மற்றும் 2019-_2020 ஆம் ஆண்டுக்கான மானிய மும் விடுவிக்கப்படவில்லை.

இருப்பினும், 2017-_2018 ஆம் ஆண்டிற் கான செயல்பாட்டு மானியத்தினை பெரும்பாலான மற்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

எனவே, அடிப்படை மானிய நிலுவைத் தொகையான 548.76 கோடி ரூபாயையும், செயல்பாட்டு மானியம் 2,029.22 கோடி ரூபாயையும் தமிழ் நாட்டிற்கு விரைந்து விடுவிக்க வலி யுறுத்தப்படுகிறது.

ஒன்றிய அரசிடமிருந்து பெற வேண்டிய நிலுவைத் தொகைகள் பெருந் தொற்றினால், மாநிலத்தின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாநிலம் இன்னும் கடும் நிதிச்சுமையில் உள்ளது.

பெருந்தொற்றினால், சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்துகளை கொள்முதல் செய்யவும், ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்டங்களைச் செயல் படுத்தவும், மாநில அரசிற்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 13,504.74 கோடி ரூபாய் உட்பட 20,860.40 கோடி ரூபாய் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது. மாநிலம் தனது நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வர, இந்த நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஒன்றிய அரசிற்கு வலியுறுத்தப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்திய பொழுது, மாநிலத் தின் வருவாய் பாதுகாக்கப்படும் என்று ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், மாநிலம் தனது நிதி சார்ந்த அதிகாரத்தைக் கைவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில், உறுதிய ளிக்கப் பட்ட பாதுகாக்கப்பட்ட வரு வாய்க்கும், வசூலிக்கப்பட்ட வருவாய்க்கும் இடையே பெரும் இடைவெளி இருந்துள்ளது. பெருந்தொற்றிற்கு முன் னரே, இத்தகைய போக்கு காணப்பட்டது. அதன்பின், இந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாநிலத்தின் வருவாய் இன்னும் அதிகரிக்கவில்லை. இந்நிலையில், 30.06.2022 அன்று, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகை வழங்கும் காலம் முடிவுக்கு வருகிறது. இதன் விளைவாக, 2022_-2023 நிதியாண் டில், தமிழ்நாடு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும்.

இழப்பீடு வழங்கும் காலத்தை, ஜூன் 2022-க்குப் பின் குறைந்த பட்சம் 2 ஆண்டுகளுக் கு நீட்டிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிற்கு வலியுறுத்தப் படுகிறது.

இவ்வாறு அதில் கூறப் ப ட்டுள்ளது.


No comments:

Post a Comment