புதுடில்லி, ஏப்.2- ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (1.4.2022) சந்தித்தார்.
டில்லி சென்றுள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில், ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
நேற்று காலையில் ஒன்றிய நிதி அமைச்சரை சந்தித்த பிறகு தொழில்துறை அமைச்சரை முதல் அமைச்சர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தொழில்துறை சார்ந்த முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பியூஸ் கோயலிடம் வழங்கினார்.
இதில் முக்கியமாக, பின்னலாடை நிறுவனங்களின் கோரிக்கையான நூல் விலை குறைப்பு, சேலம் எஃகு தொழிற்சாலையில் மிகையாக உள்ள நிலங்களை பாதுகாப்பு தொழில் வழித்தடங்கள் அமைக்க ஒதுக்கவேண்டும், தருமபுரி, மன்னார்குடி, வாழப்பாடி, சேலம் ஆகிய பகுதிகளில் ஜவுளிப்பூங்கா அமைக்க ஒன்றிய அரசு ஒத்துழைப்பு அளிப்பதுடன், தேவையான நிதி அளிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல் அமைச்சர், பியூஸ் கோயலிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment