அடுத்த கட்டம் தாவும் இ(ம)ந்தி! 'மின்னஞ்சல்'களும் ஹிந்தியில்தானாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 18, 2022

அடுத்த கட்டம் தாவும் இ(ம)ந்தி! 'மின்னஞ்சல்'களும் ஹிந்தியில்தானாம்

 ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் தொடரும் ஹிந்தித் திணிப்பு

புதுடில்லி,ஏப்.18- ஒன்றிய பாஜக அரசால் ஒற்றை மொழித்திணிப்பு நடவடிக்கையாக ஹிந்தி மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப் பட்டு  வருகிறது. வடகிழக்கு மாநிலங் களிலுள்ள பள்ளிகளில் ஆங்கிலத் துக்கு மாற்றாக ஹிந்தி பாடம் கட்டாயம் என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரே பேசினார். அதற்கு பலதரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில், 'மின்னஞ்சல்' வழி தகவல் தொடர் புகள் அனைத்தையும் ஹிந்தியில் மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'ஆங்கிலத்திற்கு மாற் றாக, ஹிந்தியை பயன்படுத்த வேண் டும்' என கூறியதற்கு, தமிழ்நாடு உள் ளிட்ட தென்மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின், கருநாடக மேனாள் முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். 'இந்தியாவின் இணைப்பு மொழி யாக தமிழ் மொழியே இருக்க வேண்டும்' என, இசை அமைப்பாளர் .ஆர்.ரஹ்மான் கருத்து  தெரிவித் திருந்தார்.

இந்நிலையில், ஒன்றிய அமைச்ச கங்களில், அலுவல் மொழியாக ஹிந் தியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக உள்துறை அமைச்சகத்தில், அலுவல்பூர்வமான அனைத்து தகவல் தொடர்புகளும், ஹிந்திக்கு மாறி உள்ளன. கோப்புகள் ஹிந்தியில் எழுதப்படுவதுடன் அதில் அதிகாரிகள் எழுதும் குறிப்புகளும் ஹிந்தியில் தான் உள்ளன. உள்துறை அமைச்சகம் சார்பில், ஊடகங்களுக்கு அனுப்பப் படும் செய்திக் குறிப்புகளும் ஹிந்தியில் தான் அனுப்பி வைக்கப் படுகின்றன.

இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஹிந்தித் திணிப்பின் அடுத்த கட்டமாக அலு வல்பூர்வமாக அனுப்பி வைக்கப்படும் மின்னஞ்சல் வழி கடிதங்கள், தகவல் தொடர்புகள் அனைத்தும் இனி ஹிந்தியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment