சமூகநீதி நமது உயிர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 18, 2022

சமூகநீதி நமது உயிர்!

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம் 'சமத்துவ தினம்' என கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தளபதி அவர்கள் அறிவித்துள்ளது, உள்ளபடியே சமூகநீதிபற்றாளர்களுக்கு தேன் போன்ற செய்தியாகும். தந்தை பெரியார் பிறந்த நாள் 'சமூக நீதி நாள்', புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் 'சமத்துவ நாள்' என்பது என்னே தத்துவார்த்தமான ஒற்றுமை.

சமூக நீதி, சமத்துவம் இரு கண்கள் என்றால் , அய்யா- அண்ணல் இரு கண்கள், நாணயத்தின் இருபக்கங்கள்,தராசின் இரண்டு பக்கங்கள் என போற்றப்படும் அய்யா - அண்ணல் அவர்களின் புகழுக்கு மேலும் பெருமை தருவதாக மாண்புமிகு தளபதி அவர்களின் அறிக்கை உள்ளது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. மனிதன் மனிதனாக வாழ, பகுத்தறிவு, சம உரிமைக்காக களம் கண்ட அய்யா -அண்ணல் அவர்களின் கேடயமான நாம் அந்த தலைவர்களின் கொள்கைகளை என்னாளும் வெற்றி என்ற உச்சத்தில் வைக்கஉறுதிகொள்வோம். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில், புரட்சிப் புயல் வைகோ, எழுச்சித்தமிழர் திருமாவளவன் ஆகியோரோடு இணைந்து சமூக நீதிக்கான சரித்திர நாயகர் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம். சமூக நீதி, சமத்துவம் நமது உயிர்மூச்சு என்று எண்ணி களம் வெல்வோம்.

மு. சு. அன்புமணி,  மதுரை.


No comments:

Post a Comment