சமூக நீதி பயணம் வெல்கவே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 18, 2022

சமூக நீதி பயணம் வெல்கவே!

தமிழ்நாட்டில் தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 89 வயதிலும் அடுத்த ஆண்டு 90 வயதை அடையும் நிலையில் முதுமையிலும் ஓர் இளைஞரைப் போல துடிப்புடன் செயல்படும் அவரது கடமை உணர்வு, ஓய்விலா உழைப்பு என்பது நினைப்பவர்க்கு இவர் அன்றோ நமது "தமிழினப் போராளி" என பாராட்டத் தோன்றும் அல்லவா?

இவரின் இத்தகைய பிரச்சாரப் பயணம், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும். ஏன் எனில் மத்தியில் ஆளும் பா... அரசின் மக்கள் விரோதத் திட்டங்களை, கொள்கைகளை எதிர்க்கவும், போராடவும், மக்கள் மன்றத்தில் பா... அரசின் 'நீட்' தேர்வு - தேசிய கல்விக் கொள்கை - மாநில உரிமை பறிப்பு ஆகியவற்றின் சமூக அநீதிகளை ஒழித்திட தந்தை பெரியாரின் வழியில் சமூகநீதி வெல்கவே என்று திராவிடர் கழகம் நடத்தும் உரிமை முழக்கம், சமூகநீதி முழக்கம் எனலாம். மேலும் பா... அரசின் 'நீட்' தேர்வு  என்பது மாணவர்களின் மருத்துவக் கனவை சீர்குலைத்து, மாணவர்களுக்கு மன உளைச்சல் தந்து, உயிர்களை பலி வாங்கும் பலி பீடம் என கூறலாம்.இதுபோலவே தேசியக் கல்விக் கொள்கை என்பது பா... அரசின் தந்திரத்தில் உருவான இந்தி திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு மூலம் மாணவர்களின் கல்வியை சீரழிக்கும் கொள்கை என்பதால் இதனையும் எதிர்க்கிறோம்.

மாநில உரிமை மீட்பு என்பது பா... அரசின் சமூக அநீதிகளை ஒழித்திட தந்தை பெரியாரின் வழியில் சமூக நீதி பயணம் வெல்கவே! ஏன் எனில்?

இது பெரியார் மண்! தமிழ்நாடு சமூகநீதி மண்!! சுயமரியாதை மண்!!!

எனவே நாட்டில் சமூக அநீதிகள் ஒழிந்திட, சமூகநீதி (பயணம்) வெல்கவே என தமிழர் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு "திராவிட மக்கள் சமூகநீதிப் பேரவை" சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- திராவிடதாசன், பம்மல்

No comments:

Post a Comment