மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
சென்னை, ஏப்.18- தாழ்த்தப் பட்ட சமூக மக்களின் உரிமை களுக்காக அனைத்து அமைப்பு களையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சட்டமேதை டாக்டர் அம் பேத்கரின் 132 ஆவது பிறந்த நாளான 14.4.2022 அன்று சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதி வளாகத்தில் உள்ள அவ ரது சிலைக்கு கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கே.பால கிருஷ் ணன் பேசியதாவது: ஜாதிய ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்தியா வில், உழைக்கும் வர்க்கம் ஒன் றிணைந்து போராடினால்தான் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் உரிமைகளை பெற முடியும். எனவே மார்க்சிஸ்ட் கட்சி அம் பேத்கர் பிறந்தநாளை கொண் டாடுகிறது.
நாடு விடுதலை பெற்று பல பத்தாண்டு கள் கடந்த பிறகும், தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் அடிப்படை வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வில்லை. ஆட்சி மாற்றங்கள், சட்டங்கள் பல வந்தபோதும் அந்த மக்களுக்கு உரிமைகள் கிடைக்கவில்லை. அனைத்து உரிமைகளையும் இழந்தவர்களாக உள்ளனர்.
உலகின் வளர்ந்த நகரங்களின் பட்டிய லில் முதல் 10 இடத்தில் சென்னை உள்ளது. ஆனால், அடித்தட்டு மக்கள் குப்பங்களி லும், கழிவுநீர் கால்வாய் பகுதி களிலும் வாழ்கின்றனர். நகரத் தின் சுகாதாரமான மய்யப் பகு தியில் வாழ முடியவில்லை. சமத் துவபுரங்கள் கட்டப்பட்டாலும் கூட, ஓரங்கட்டப்பட்ட, ஒதுக்கப் பட்ட, புறக் கணிக்கப்பட்ட இடங்களில்தான் வாழ்கிறார்கள். சுகாதார வசதி கொண்ட மய்யப்பகுதியில் குடியமர்த்தும் நிலை கூட இல்லை. வாழ்க்கையின் அத்தனை கொடுமைகளையும் அனுபவிப்பவர்களாக உள்ளனர்.
ஜாதி ரீதியாக ஒடுக்கப்படுவது மட்டுமல்ல, பொருளாதார ரீதி யாகவும் சுரண்டப்படுகிறவர்களா கவும் உள்ளனர். ஜாதியத்தை ஒழிக்க வேண்டும். அதற்கு முன் பாக, ஜாதியத்தின் விளைவால் உருவான தீண்டாமை, ஒடுக்கு முறையை ஒழிக்கும் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளோம். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி இயக்கங்களும், ஒடுக் கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கங்களாக செயல்பட்டு வந்துள்ளன. கடை கோடி கிராமத்தில் தாழ்த்தப் பட்ட சமூக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டாலும், உடனடி யாக களத்தில் நிற்கும் அமைப்பாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது.
அம்பேத்கர் பிறந்த நாளை ‘சமத்துவ நாளாக’ தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதற்கு பாராட்டு. அதேநேரத்தில், சமத் துவத்தை உருவாக்க அனைத்து வித நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந் தவர் புகார் கொடுத்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அய்.அய்.டி. மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக் கப்பட்டது தொடர்பாக புகார் கொடுத்து ஓராண்டாகியும் நட வடிக்கை எடுக்கப்படாமல் உள் ளது. மாணவியை அய்.அய்.டி.-யை விட்டு வெளியேற்றும் முயற்சி கள் நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது. அய்.அய்.டி.யில் படிக்கும் மாணவிக்கே இந்த நிலைதான் என்றால், கிராமப் புறங்களின் நிலையை சொல்லத் தேவையில்லை.
சமூகக் கொடுமை, ஜாதிய ஏற்றத்தாழ்வு தொடரும் வரை, தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் முழு விடுதலை பெறும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் போராட்டம் ஓயாமல் தொடரும். தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் முழு விடுதலைக்கு போராடும் அனைத்து அமைப்பு களையும் ஒருங்கி ணைத்து ஜாதி ஒழிப்பு போராட்டத்தை முன் னெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment