மும்பை, ஏப்.18 பல்வேறு மாநிலங் களில் நடந்த இடைத்தேர்தல்களில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங் கிரஸ் கட்சியும், பீகாரில் ஆர்ஜேடி-யும், மகாராட்டிரா மற்றும் சத்தீஸ் கரில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
மேற்கு வங்காளத்தின் பாலி கங்கே, சத்தீஸ்கரின் கைராகர், பீகாரின் போச்சாஹான் மற்றும் மகாராட்டிராவின் கோலாப்பூர் வடக்கு ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதேபோல், மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடை பெற்றது. இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (16.4.2022) நடைபெற்றது.
இதில், மேற்கு வங்கத்தில் திரிணா முல் காங்கிரஸ் கட்சியும், பீகாரில் ஆர்ஜேடி-யும், மகாராட்டிரா மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் 1998 இல் கட்சி உருவாக்கப்பட்டதிலிருந்து முதன் முறையாக அசன்சோல் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது, மற்றும் பாலிகங்கே சட்டமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் மேற்கு வங்க இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது. அசன்சோல் தொகுதியில், மேனாள் ஒன்றிய அமைச்சரும், டி.எம்.சி. வேட்பாளருமான சத்ருகன் சின்ஹா 30,3209 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் அக்னிமித்ரா பாலை தோற்கடித்தார். பாலிகங்கே தொகுதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சி.பி.அய்.(எம்) சைரா ஷா ஹலீமை விட 20,228 வாக்குகள் அதிகம் பெற்று பாபுல் சுப்ரியோ வெற்றி பெற்றார்.பீகாரில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) போச்சாஹான் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. பீகாரில் இந்த ஒரு தொகுதியில் தான் இடைத்தேர்தல் நடந்தது. ஆர்ஜேடி வேட்பாளர் அமர் குமார் பாஸ்வான் 48.52 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார், பாஜக வேட்பாளர் பேபி குமாரி 2ஆவது இடத்தில் உள்ளார்.மகாராட்டிராவில் உள்ள கோலாப்பூர் வடக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்சிறீ ஜாதவ் 54.25 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்சிறீ ஜாதவ் 19,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஒருங்கிணைக்கப்பட்ட மகா விகாஸ் அகாடி பா.ஜ.க.வுக்கு படுதோல்வியை அளித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சந்திரகாந்த் மரணமடைந்ததன் காரணமாக நடை பெற்ற இடைத்தேர்தலில் ஜாதவின் மனைவி ஜெய்சிறீ ஜாதவ் வெற்றி பெற்றுள்ளார்.
சத்தீஸ்கரில் உள்ள கைராகர் சட்டமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் யாசோதா வர்மா வெற்றி பெற்றுள்ளார்.
ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள கைராகருக்கு இடைத்தேர்தல் நடந்தது. கைராகரில் உள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்த ஜேசிசி(ஜே) சட்டமன்ற உறுப்பினர் தேவ்வ்ரத் சிங் மரணமடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்றது. ஜேசிசி (ஜே) சிங்கின் அனுதாபத்தால் வாக்குகளைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் அவரது உறவினருக்கு இடைத்தேர்தலில்போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. காங்கிரஸ் வேட்பாளர் யசோதா வர்மா மற்றும் பாஜகவின் கோமல் ஜாங்கேல் ஆகியோர் இப் பகுதியில் எண்ணிக்கையில் வலுவாக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 2018 சட்டமன்றத் தேர்தலில், ஜங்கேல் 850 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தார்.
No comments:
Post a Comment