காஞ்சிபுரம், ஏப். 25- நீடித்த, நிலையான வளர்ச்சியை எட்டுவதன் மூலம் தமிழ் நாடு கிராம ஊராட்சிகள் தேசிய அளவில் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக விளங்கும் என்று காஞ்சிபுரம் மாவட் டம் செங்காடு கிராமத் தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தேசிய ஊராட்சிகள் (பஞ்சாயத்து ராஜ்) தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ‘ஊரக வளர்ச்சிமற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு’ என்ற தலைப்பில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நேற்று (24.4.2022) நடந் தது. காஞ்சிபுரம் மாவட் டம் சிறீபெரும்புதூர் ஒன் றியத்தில் உள்ள செங் காடு கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட் டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற் றார். அவர் பேசியதாவது:
"நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைய, கிராம ஊராட்சிகள் தகுந்தநடவடிக்கைகளை மேற்கொண்டு, திராவிட மாடல் ஆட்சி இதுதான் என்பதை உலகுக்கு உணர்த்தப் போகிறோம். நீடித்த, நிலையான வளர்ச் சியை எட்டுவதன் மூலம் இந்த கிராம ஊராட்சிகள் தேசிய அளவில் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக விளங்கும்.
கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்க, ‘முன்மாதிரி கிராம விருது’, ‘உத்தமர் காந்தி விருது’, அனைத்து மாவட்டங்களிலும் சிறப் பாக செயல்படுகிற தொழில் மற்றும் வணிக நிறுவனங் களுக்கு விருது என அரசு பல்வேறு விருதுகளை அறிவித்து வருகிறது.
ஒன்றிய, மாநில அரசு கள் பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வரு கின்றன. இவற்றை திறம் பட ஒருங்கிணைத்து, கடைக்கோடி மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க உள்ளாட்சி அமைப்பு களால்தான் முடியும். எதிர்க்கட்சியை சேர்ந்த வர் ஊராட்சித் தலைவ ராக இருந்தாலும், அந்த ஊராட்சிகளுக்கு தேவை யான அனைத்து தேவை களும், உதவிகளும் செய்து தரப்படும்.
குடிநீர் பிரச்சினை, நியாயவிலைக் கடை பிரச்சினை, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வரக்கூடிய இடையூறு கள், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்க ளாக மாற்றுவது,சுகாதார நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். இதை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப் படும்". இவ்வாறு முதல மைச்சர் கூறினார்.
முன்னதாக, பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றுவதாக முதல மைச்சர் உறுதியளித்தார்.
பின்னர், ஊராட்சி மன்ற அலுவலகம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அங்கு கிராம நடவ டிக்கைகள் குறித்து ஊராட்சி தலைவர், மற்றும் அதிகா ரிகளிடம் கேட் டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன் பரசன், சிறீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பி னர் டி.ஆர்.பாலு,சிறீ பெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை, ஊரக வளர்ச்சி, ஊராட் சித் துறை செயலர் பி. அமுதா,துறை இயக்குநர் பிரவீன் நாயர், காஞ்சி புரம் ஆட்சியர் மா.ஆர்த்தி , மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் படப்பை மனோகரன், ஊராட்சி மன்றத் தலைவர் செஞ்சுராணி கவாஸ்கர், துணைத் தலைவர் டி.சுதாகர் பங் கேற்றனர்.

No comments:
Post a Comment