ஏற்காடு, ஏப். 25- ஏற்காட்டில் யூனியன் வங்கி நல சங்கத் தின் நிர்வாகிகள் கலந்து கொண்ட மூன்று நாள் சமூக நீதி பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் அங்க மாக இருக்கும் சமூக நீதி அகடாமி மற்றும் எம்ப வர், அறக்கட்டளை இணைந்து 2022 ஏப்ரல் 22 முதல் 24 வரை ஏற்காடு வெலிங்டன் ஹில் ரிசார்ட் ஸில் சமூக நீதி பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் நல சங்கத்தின் நிர்வாகிகள், மத்திய குழு உறுப்பினர் கள் 60 கலந்து கொண்ட னர். அனைவருக்கும் பங் கேற்புச் சான்றிதழ் வழங் கப்பட்டது.
இடஒதுக்கீட்டுக் கொள்கை வரலாறு, புதிய கல்விக் கொள்கை, நீட், நீதிக்கட்சி மற்றும் திராவிட இயக்கம், தந்தை பெரியாரின் சமூக நீதி போராட்டங்கள், மெக் காலே கல்வித் திட்டம் ஆகிய தலைப்புகளில் பேராசிரியர்கள் ப.காளி முத்து, ஆர்.சுப்பிரமணி (பெரியார் பல்கலைக் கழ கம், சேலம்), தோழர் தாம ரைக்கண்ணன் ஆகியோர் விரிவாக கருத்துரை வழங்கினர். பயிலரங்கம் மிகவும் ஊடாடும் வகையில் இருந்தது மற் றும் விரிவுரையாளர்களி டம் நல சங்க உறுப்பி னர்கள் நல்ல வண்ணம் கேள்விகள் எழுப்பினர்.
முன்னதாக, நல சங் கத்தின் மத்திய குழு கூட் டம் கோ.கருணாநிதி (தலை வர், யூனியன் வங்கி பிற் படுத்தப்பட்டோர் நல சங் கம், தமிழ்நாடு) தலை மையில் நடைபெற்றது.

No comments:
Post a Comment